Tuesday, July 28, 2026

திமுகவின் அறிவுச்சூழல்!

 திமுக ஆட்சி காலத்தில் அரசு சார்பாக நடத்தப்பட்ட இலக்கியத் திருவிழாக்களில் இடதுசாரிகள், அம்பேத்கரியவாதிகள், தமிழ்த்தேசியவாதிகள், பெண்ணியவாதிகள், சூழலியவாதிகள், பாலியல் சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் கருத்துரை ஆற்ற அழைக்கப்பட்டனர்.

பெரும்பாலும் யாரை எங்கு அழைப்பது என்கிற இந்த முடிவுகளை அதிகாரிகள் தான் எடுத்தனர் என்றாலும் திமுக ஆட்சியில் தான் இது நடந்தது என்பதையும் அதற்கு திமுக ஆட்சி ஏற்படுத்திய சூழலும் (DMK Eco System) தான் காரணம் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம், சர்வதேசப் புத்தக கண்காட்சி ஆகியவை எல்லாம் திமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டவை.

திமுகவுடன் கூட்டணியில் இருந்தவர்கள் தயவில் தற்போதைய ஆட்சி நடந்தாலும், இந்த விழாக்கள் நடக்குமா? அப்படியே நடந்தாலும் அவற்றின் அரசியல் மற்றும் கலைத்தன்மை எப்படி இருக்கும்?

கடந்த அறுபது ஆண்டுகளாக திமுகவின் அறிவுச்சூழல் தான் இங்கு நிலவியது.

இனிமேல் அது என்னவாகும்?

31 மே 2026

மறைந்து போன பாசிச எதிர்ப்பு!

 ஆட்சி மாற்றத்தால்

நடந்தது பாஜகவைப் பற்றிய நமது கவனத்தைத்
திசை திருப்பி இளைஞர்கள் மத்தியில் திமுக வில்லனாக்கப்பட்டதே.

இத்தனைக்கும் நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கும், உரிமைக்கும் திமுக விட பங்காற்றியவர்கள் யாரும் இல்லை.

இப்போது இதே இளைஞர்கள் அனுபவிக்கும் அனைத்து வசதிகளையும் உருவாக்கியது திமுகவே.

ஆனால் இப்போது இதே இளைஞர்களுக்கு திமுக என்றால் கசக்கிறது.

இதற்கு நடுநிலவாயர்கள் முதல் கூட்டணிக் கட்சியினர் வரை கணிசமான பங்காற்றியுள்ளனர்.

பாஜக வழக்கம் போல பாசிசத்தை நார்மலைஸ் செய்வதற்கான அனைத்து வேலைகளை செவ்வனே செய்து வருகிறது.

ஏறக்குறைய முஸ்லீம் வெறுப்பு, பார்ப்பன ஆதிக்கம் என்பது கேள்விக்கு அப்பாற்ப்பட்டதாகிவிட்டது.

ரூபாயின் மதிப்பு நூறை எப்போது வேண்டுமானாலும் தொடலாம். அது இந்தியப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியின் அடையாளமாகவே கருதப்படும்.

ஆனால் நடிகரின் ரசிகர்கள் சாவு வீட்டுக்கு அவர் தமது ‘மற்றவளை’ அழைத்து வந்ததைப் பற்றிக் கவலைப்படுகின்றனர்.

இதற்கு முன்பெல்லாம் வீடுகளில் இருக்கும் பெருசுகளுடன் பழமையான கருத்துக்களை எதிர்த்து வாதிடுவோம். இப்போது இளம் தற்குறிகளுடன் முட்டிக்கொண்டிருக்கிறோம்.

பகுத்தறிவும் சுயமரியாதையும் தான் நமது ஆயுதங்கள்!

31 மே 2026

திமுக, திமுகவாக இருப்பதே கடினம் !

 திமுக ஆட்சி கொள்கை ரீதியாக, வெளிப்படையாக தலித், இஸ்லாமியர், கிறிஸ்தவர், பெண்கள், பாலியல் சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் ஆதரவு நிலைப்பாடு எடுப்பதால் இந்தப் பட்டியலுக்குள் வராத ஆட்களுக்கு திமுகவைப் பிடிப்பதில்லை.


திமுக ஆட்சியில் மேற்படி பட்டியலில் வருவோருக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கும் இந்த வெறுப்பு தான் காரணம்.

இந்த வழக்குகளில் காவல்துறையினர் கண்டிப்பாக திமுகவிற்கு எதிராக சேம் சைட் கோல் போடுவார்கள். வழக்குகளைப் பதிய மாட்டர்கள். பாதிக்கப்பட்டவர்களை அலைக்கழிப்பார்கள். முடிந்தால் அவர்களையும் அடிப்பார்கள். ஏனெனில் அவர்களில் பலர் ஜாதியவாதிகளே!

திருப்புறங்குன்ற விவகாரத்தில் நடிகர் கட்சி எந்த நிலைப்பாடும் எடுக்காமல் இருந்தது, இந்த வெறுப்பாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட் செய்தி தான். நாங்கள் தர்கா அருகே விளக்கு ஏற்றும் முயற்சியைத் தடுக்க மாட்டோம் என்பதே அது. எனவே தான் திருப்பறங்குன்றத்தில் நடிகர் சார்பாக ஒரு சங்கி நிறுத்தப்பட்டு அவரும் வென்றார்.

தமிழ்நாட்டில் அதிகாரச் சமநிலையை (status quo) பாதுகாக்க நினைப்பவர் யாருக்கும் திமுகவைப் பிடிக்காது. எந்தச் சமூகப் பின்னணியிலும் இந்தப் பழமைவாதிகள் இருப்பார்கள்.

பல பேர் கம்யூனிஸ்டாக இருப்பதே பார்ப்பனர்களின் (பார்ப்பனர் வேறு பார்ப்பனியம் வேறு என்று வியாக்கியானமும் தருவார்கள்) மீதான மயக்கத்தினால் தான். வர்க்கம் தான் பிரதான பிரச்சனை அவர்களுக்கு. அதனால் தான் அரிய வகை ஏழைகளுக்கு (EWS) இட ஒதுக்கீடு வேண்டும் என்று ரங்கராஜர் (கம்யூனிஸ்டுகளுக்கு ஜாதி இல்லை என்று நம்புவோம்) மாநிலங்களவையில் வாக்களித்தித்தார். கண்டிப்பாக பிற்படுத்தப்பட்ட அல்லது பட்டியலின கம்யூனிஸ்ட் இதை ஆதரித்திருக்க மாட்டார்.

“என்னங்க அநியாயமா இருக்கு” என்று அப்போதே அங்கேயே அய்யங்காருடன் முரண்பட்ட கனிமொழி கருணாநிதியை எந்த ஆதிக்கவாதிக்குத் தான் பிடிக்கும்?

தமிழ்த்தேசியவாதிகள் பலருக்கு கடவுள், மதம், ஜாதி, வர்க்கம் மீதான விமர்சனமே இருக்காது. முரட்டு, வறட்டு மொழி வெறியே பலரை புலி ஆதரவாளர்கள் ஆக்கியது.

தலித்துகள் தமது ஜாதிய விடுதலைக்காகப் போராடுவது நியாயம் தான். ஜாதி ஒழிப்பு பற்றிப் பேசுவதெல்லாம் சரி தான். ஆனால் பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்ட சூத்திரனுக்காகவும் திமுக போராடவேண்டியிருக்கிறதே! அதை தலித்துகள் ஏற்றுக்கொள்வார்களா?

இப்படி திமுக, திமுகவாக இருப்பதே கடினம் தான்.

30 மே 2026

தேர்தலுக்குப் பின் : 16

 திமுக ஆதரவாளர்கள் சந்திப்பு ஒன்றை ஐம்பது வயது ஆட்களுக்கும் நடத்தலாமே!

30 மே 2026

தேர்தலுக்குப் பின் : 15

 திமுகவிற்கு எதிராகப் புரளியைப் பரப்புவோர் மட்டுமல்ல, அதை உடனடியாக நம்பும் தற்குறிகள் (அதைவிட) ஆபத்தானவர்கள்.

தவெகவின் பொய்கள்!

 தவெகவின் பொய்கள்!

இதுவரை இல்லாத முதல்வர் இருக்கை மீதான வெள்ளைத் துண்டை விஜய் (கொண்டு வந்ததோடு அவரே அதை) நீக்கியதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன.

30 மே 2026

தேர்தலுக்குப் பின் : 14

 நடப்பவற்றைப் பார்க்கையில் நம்ம ஆளுக 34% பேர் தற்குறியே தான்.

30 மே 2026

தேர்தலுக்குப் பின் : 13

 பெருமாள் மணி, பீத்த பத்திரிக்கையாளர் மணி, ஷபீர் போன்றவர்கள் கூலிக்காகவோ, திமுக மீதான வெறுப்பின் காரணமாகவோ தவெகவை தமிழர் தலையில் கட்ட உதவியிருக்கிறார்கள். இதனால் தமிழ்நாட்டுக்குக் கேடு வரும் என்று தெரிந்து செய்திருந்தால் அது பொதுமக்களுக்கு அவர்கள் செய்த துரோகம்.

மே 30, 2026

தவெகவின் இணைய அடியாட்கள்! (ஆங்கிலப் பதிவு)

 Whenever I think about techno-savvy youngsters working for corrupt politicians, I remember the film 'Enemy of the State' featuring Will Smith, in which the youngsters also get punished in the end for spreading lies and using technology for illegal activities. 'We only helped the politician technically; we didn’t realize the repercussions,' they lament.

That’s what’s already happening in TN as the TVK government, formed by lies and fake propaganda, is getting exposed every minute. The virtual warriors are coming out like rats from their holes, pleading guilty.

It is a lesson for youngsters, especially Media / Viscom students who are more into celebrity management instead of producing meaningful media.

Fr. Rajanayagam, a Jesuit and the godfather of Viscom education in TN, must be embarrassed for creating a creamy layer of ambitious, corrupt, and irresponsible media personalities in the state. Probably he didn’t intend it in his time, but his followers (teachers) have totally destroyed the young generation, making them insensitive and ultra-careerist across the state.

I have hardly met any brave, committed, and creative media / Viscom teacher in Tamil Nadu who would prefer to screen Kurosawa or Bergman instead of a Spielberg / Nolan film to their students.

The young virtual warriors who work for TVK may be thrilled by the immediate results as lies spread faster and are acutely tasty. But when the truth bites back, it will be chronic and painful.

Amudhan RP
Documentary Practitioner
Chennai

29 மே 2026

திமுக அரசின் சாதனைகள் : ஆங்கிலப் பதிவு

Actually, the then TN Government under MK Stalin did exceptionally well in every sense.

The DMK Government developed the state economically, socially, and politically, ticking all the boxes in terms of growth, FDI, employment, social justice, communal harmony, gender equality, education, health, sports, public transport, and infrastructure development.

MKS was very proactive and courageous in protecting state rights, linguistic sovereignty, archaeological evidence, heritage sites, and ecological balance.

There was a time when every Tamilian would feel proud to live in this period. People would envy you for having a CM like MKS. He set a standard for a leader who can be courteous, committed, and professional.

MKS had some fantastic people in his ministry and administration, starting from Ma Su, PTR, Thangam Thennarasu, Anbil Mahesh, TRB Raja, and of course Udhaynidhi, who were competing with each other with their outstanding performances.

The party seriously believed that the people of TN would decide logically and rationally while voting.

Unfortunately, people fooled themselves by trusting the fake propaganda and extremely ambitious social media manipulation by the TVK gang.

It’s a challenge for all analysts, critics, activists, and thinkers. Everyone is trying hard to find fault with the then DMK government instead of questioning the fraudulent practices of the TVK gang.

It’s a lesson for all political parties: giving good governance and waiting for voters to respond positively isn’t enough; it’s necessary to expect the worst always, even from your loyal partners and voters, because anyone can betray you, and everyone is capable of being weak, cowardly, stupid, and crooked.

We can only pity the voters, especially the educated youth in TN, who trusted a film star over a seasoned politician, despite having all access to the facts, for their vulnerability and ignorance.

Amudhan RP
Documentary Practitioner
Chennai

29 மே 2026

தேர்தலுக்குப் பின் : 12

 தவெக நாடகத்தால் பல பர்னிச்சேர்கள் உடைக்கப்பட்டன. எனது பேவரைட் காங்கிரஸ். சும்மா தூள்!

தேர்தலுக்குப் பின் : 11

 எல்லோரும் தவெகவில் இணைகையில், அக்கட்சியே பாஜகவில் இணைந்தால் பிளாஸ்ட் தான்!

குறைக்கப்பட்ட பேருந்துகள்!

 தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்திருக்கிறது.

திமுக தொடர்ந்திருந்தால், பெட்ரோல், டீசல் பிரச்சனையால் ஏற்பட்டிருக்கும் சுமையை அரசு தாங்கிக்கொண்டு, பேருந்துகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்திருக்காது. அவர்களது அனுபவமும், சமூக அக்கறையும் இந்தத் துணிச்சலை அவர்களுக்குக் கொடுத்திருக்கும்.

ஏனெனில் பொருளாதாரம் என்பது கணக்கு வழக்கு மட்டுமல்ல. யாருக்கு எதை எவ்வளவு கொடுப்பது என்பதும் பொருளாதாரம் தான். அதனால் தான் திமுக தோற்கடிக்கப்பட்டது.

28 மே 2026

ஜெயாவுக்குப் பிடிக்காத மெட்ரோ திட்டம்!

 இரும்புப் பெண்மணி ஜெயாவுக்கு கலைஞர் கொண்டு வந்ததால் மெட்ரோ திட்டத்தைப் பிடிக்கவில்லை.


திமுக ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் எதிரிகள் ஒன்று சேர்ந்து எதையாவது காரணத்தை உருவாக்கி அடுத்த முறை தோற்கடித்துவிடுவார்கள் அல்லவா. அதே போல அடுத்த முறை அதிமுக ஆட்சிக்கு வந்த போது ஜெயா மெட்ரோ திட்டத்தை நிறுத்தினார். மோனோ ரயில் எனும் திட்டத்தைக் கொண்டுவர முயற்சித்தார். அதில் வழக்கம் போல கடுமையாகத் தோற்றுப்போனார்.

அடுத்த முறை கலைஞர் வந்து மெட்ரோ திட்டம் மீண்டும் தொடங்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

மீண்டும் திமுக ஆட்சி தோற்கடிக்கப்பட்டது.

மீண்டும் அடிமைகள் கட்சி ஆட்சிக்கு இரண்டு முறை தொடர்ச்சியாக வந்தது. மெட்ரோ தட்டுத்தடுமாறி வளர்ந்து வந்தது. வேறு வழியில்லாமல் ஜெயா அதைத் தொடங்கினார். இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு அதிக விலைக்கு டிக்கட்டுகள் விற்கப்பட்டன. மாநில அரசு அதற்கான இழப்பீட்டைத் தரவில்லை.

பொதுப் போக்குவரத்தின் நோக்கம் லாபம் அல்ல. மக்களுக்குப் பயனளிப்பதே. இந்திய ரயில்வே கூட ஐந்து ரூபாய்க்குக் கூட டிக்கெட்டுகளை விற்கிறது. அதன் நோக்கம் மக்கள் எளிதாகப் பயணம் செய்யவேண்டும். படிக்க வேண்டும், வேலைக்குப் போகவேண்டும், தொழில் செய்யவேண்டும், பொருட்கள் நகரவேண்டும், பொருளாதாரம் அப்போது தான் வளருமென்பதால்.

ஆனால் ஜெயா நிதி ஒதுக்கீடு செய்யாததால், மெட்ரோ வந்தாலும் எல்லோருக்கும் எட்டாக்கனியாகவே இருந்தது.

மீண்டும் திமுக ஆட்சி வந்து மெட்ரோ புத்துயிர் பெற்றது. ஜெயாவின் பங்காளிகளான தில்லி சுல்தான்கள் மெட்ரோவுக்கு தமது பங்கைக் கொடுக்கவில்லை. திமுக அரசே கடன் வாங்கி மெட்ரோ திட்டத்தை தொடங்கியது (இது போல பல வளர்ச்சித் திட்டங்களுக்குக் கடன் வாங்கித் தான் எல்லா நாடுகளும் மாநிலங்களும் தமது பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்கின்றன. ஆனாலும் திமுக மட்டும் அதற்காகத் தண்டிக்கப்படுகிறது).

இந்த முறை திமுக ஆட்சிக்கு மீண்டும் வந்திருந்தால் மெட்ரோ சென்னை முழுக்கப் பரவியிருக்கும்.

எனக்குத் தெரிந்த திமுக வெறுப்புப் பார்ப்பனர் கடந்த திமுக ஆட்சியின் நிறைவுக் காலத்தில் சென்னைக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த போது சென்னையைப் பார்த்து மலைத்துப் போனார் "என்ன அற்புதமாக வளர்ந்திருக்கிறது சென்னை" என்று வெறுப்பை, தமது கொண்டையை மறந்து பாராட்டினார்.

இன்னொரு சங்கி கோஷ்டியினர் சென்னைக்குப் புதிதாகத் தொழில் தொடங்க வந்த போது, சென்னையில் வளர்ச்சியைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள். கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டித் தொழிலை சென்னையில் வளர்க்கின்றனர். சென்னையை நம்பிக்கை தரும் நகரமாகப் பார்க்கின்றனர்.

அப்படிப்பட்ட சென்னையை உருவாக்கிய திமுக தான் பொய்களாலும் துரோகத்தாலும் மீண்டும் தோற்கடிக்கப்பட்டது.

சென்னையில் மெட்ரோ பெங்களூருக்கு முன்பே தொடங்கப்பட்டது. திமுகவின் எதிரிகளின் செல்லப்பிள்ளை ஜெயாவின் அடாவடித்தனம் காரணமாக அது முடக்கப்பட்டது.

இப்போது பெங்களூருவில் மெட்ரோ ஆல் போல் பரவி எங்கு வியாபித்திருக்கிறது. அதனோடு ஒப்பிடுகையில் சென்னை மெட்ரோ ஒரு குழந்தை தான். இந்தக் குறைக்கு அதிமுக, குறிப்பாக ஜெயலலிதா தான் காரணம்.

திமுக தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குக் காரணி.
அதை தற்குறிகள் ஆட்சிக்கு வந்து பார்த்து கற்றுக்கொள்வார்கள். ஏற்கனவே முந்தைய ஆட்சியின் சாதனை காரணமாக தமிழ்நாட்டுக்கு பல துறைகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதை எந்த நடுநிலைவாயர்களும் குறிப்பிடவில்லை. எந்தத் திமுகவை வாய்க்கு வாய் தீயசக்தி என்று நடிகர் சொன்னாரோ, அந்த திமுகவின் சாதனைக்காக, தற்குறி ஆட்சிக்கு விருதுகள் கிடைப்பது தான் வரலாற்று நகைமுரண்.

ஆனால் நடிகரை நம்பும் படித்த தற்குறி வாக்காளர்களுக்கு சுயமரியாதையும் பகுத்தறிவும் இருந்தால் சாட் ஜிபிடியையாவது பார்த்து தமிழ்நாட்டின் உண்மை நிலவரத்தைத் தெரிந்து கொள்ளட்டும்.

மெட்ரோவில் பயணிக்கும் ரீல்ஸ் போடும் இளம் தற்குறிகளுக்கு இந்த வரலாறு தெரியுமா?

அதைவிடக் கொடுமை, நம்மில் பலருக்கு மெட்ரோ என்பது மாநில அரசின் முன்முயற்சியில் தான் வருகிறது என்பது கூடத் தெரியாது. அங்கு ஏன் இந்தி ஒலிக்கப்படுவதில்லை என்பதைக் கவனித்தால் புரிந்திருக்கும்.

நமக்குத் தான் உண்மையைத் தேடுவது கிரிஞ்சுத்தனம் அல்லவா!

அமுதன் ஆர்.பி.
ஆவணப்பட இயக்குனர்
சென்னை

https://www.bbc.com/news/world-asia-india-33307399

28 மே 2026

தேர்தலுக்குப் பின் : 10

குடிப்பிரியர்களை அவமானப்படுத்தும், சுரண்டும் மலிவு விலை டாஸ்மாக் பார்களை மூடி பக்கத்திலேயே விலை உயர்ந்த கொள்ளைக்கார மனமகிழ் மன்றங்களைத் தொடங்கும் தற்குறி அரசுக்கு நன்றி!

28 மே 2026

செல்லப்பிள்ளைகளின் அடம்!

 நாங்கள் சமீபத்தில் நடத்திய ஒரு திரைப்பட விழாவிற்கு வந்திருந்த ஒரு இளைஞர், விழா முடிந்ததும் "நிகழ்ச்சியில் நடந்தவை எல்லாம் ஒரு சடங்காகத் தெரிந்தன, ஏதோ ஒரு கடமைக்கு நீங்கள் திரையிட்டது போல இருந்தது. எனக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது" என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். நான் அவரை அழைத்து என்னவென்று விசாரித்தேன்.


"திரையிட்ட படங்கள் அருமையாக இருந்தன. ஆனால் நிகழ்ச்சி நிறைவில் அவற்றைப் பற்றி விவாதம் நடத்தியிருக்கலாம், எனக்கு ஏமாற்றமாக இருந்தது" என்றார்.

"நேரம் கருதி, நிகழ்ச்சியை விரைந்து முடித்து விட்டோம், ஏனெனில் அரங்கத்தை வாடகைக்கு எடுத்திருந்தோம். சரியாக 1 மணிக்கு அரங்கை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். அரங்கிற்கு வெளியே நீங்கள் என்னிடம் ஏதாவது கேட்டிருக்கலாம்" என்றேன்.

கூடுதலாக "திரை அரங்கிற்குள் விவாதம் நடத்தும் போது, யார் என்ன பேசுவார்கள் என்று தெரியாது. யார் வந்திருக்கிறார்கள் என்றும் தெரியாது. எனவே சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் வந்தால் தவிர அநாவசியமான பேச்சுக்கள் ஆபத்தானவை, அவற்றுக்கு நாம் தான் பொறுப்பேற்கவேண்டும்" என்றும் சொன்னேன்.

அவர் சரியென்று ஒத்துக்கொண்டார். அடுத்த திரையிடலுக்கு இன்னும் சிலரை அழைத்துவருகிறேன் என்றார்.

இந்நிகழ்வை இரண்டு விதமாகப் புரிந்து கொள்ளலாம்.

1) இளைஞர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். மூத்தோர்கள் (நிகழ்ச்சி நடத்தியவர்கள் எல்லோரும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள்) நாம் தெளிவில்லாமல் இருக்கிறோம். அல்லது கூடுதல் கவனமாக இருக்கிறோம். அல்லது தயங்குகிறோம். அவர்கள் எதையுமே நிறைவாக, முழுமையாக நிகழ்த்த வேண்டும் என்று நினைக்கின்றனர். அரைகுறையாக இருப்பது இளைஞர்களுக்கு அதிருப்தியை அளிக்கிறது.

2) இளைஞர்கள் உரிமையோடு இன்னும் வேண்டும் வேண்டும் என்கிறார்கள். தங்களுக்கு அந்தத் தகுதி இருப்பதாக நினைக்கிறார்கள். நாங்கள் திரையிடலுக்கு வந்துவிட்டோம். எங்களைத் திருப்திப் படுத்துங்கள் என்கிறார்கள். எங்களுக்கு இன்னும் ஊட்டுங்கள் என்கிறார்கள். நாங்கள் அந்தப் படங்களைப் பற்றிப் போய்ப் படிக்க மாட்டோம் என்கிறார்கள். எங்களுக்கு எல்லாமே இங்கேயே, இப்போதே வேண்டும் என்கிறார்கள்.

ஆர்வமிருந்தால் எங்களிடம் வந்து பேசியிருப்பார் அந்த இளைஞர். அல்லது இணையத்தளத்தில் தேடிப்படித்திருப்பார். ஆனால் 'எல்லாமே சடங்காக இருக்கிறது, ஏதோ கடமைக்குச் செய்கிறீர்கள்" என்று தாக்குதலை நடத்தியிருக்கமாட்டார். அதன் பொருள் 'entitlement". செல்லக்குழந்தைகளின் அடம் (tantrum).

இதை சமீபத்தில் நடந்த தேர்தல் முடிவுகளில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

இருபது வருடங்களுக்கு முன்பு வரை நாம் மிகுந்த வறுமையில் இருந்த மாநிலம். ஆனால் இப்போது ஒரு வளர்ந்த மாநிலம். இந்த மாற்றம் எப்படி நடந்தது? அதை நடத்தியவர்கள் யார்? அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்த்து, அந்த வரலாற்றைப் பெருமையோடு நினைத்துப் பார்க்கவேண்டிய இளைய தலைமுறை, அந்த மாற்றங்களை நிகழ்த்தியவர்களின் பங்களிப்பை, தியாகத்தை புறந்தள்ளி, எள்ளி நகையாடி, இப்படித் தற்குறிகளாக மாறியது ஏன்?

எல்லாவற்றையும் புரட்டிப் போட நினைத்து ஒரு நடிகருக்கு (அவர் அழகாக இருக்கிறார். சினிமாவில் நன்றாக நடனமாடுகிறார். ஸ்டைலாக சண்டை போடுகிறார். வசனம் பேசுகிறார் என்பதைத் தவிர அவரிடம் என்ன தகுதியைக் கண்டார்கள்?) அவர் கட்சி ஆரம்பித்த இரண்டே வருடங்களில் ஆட்சியைக் கொடுத்தது ஏன்?

இவர்களுக்கு, இவர்களின் பெற்றோர்கள் ( வாழ்க்கையில், பொருளாதாரத்தில் வெற்றியோ தோல்வியோ அடைந்தவர்கள்) ஏன் இந்த வரலாற்றைச் சொல்லிக் கொடுக்கவில்லை?

ஏன் இவர்களைப் பொத்தி பொத்தி வளர்த்தார்கள்? தனக்குக் கிடைக்காத வசதி வாய்ப்புகள் தமது பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று ஏன் கடன் வாங்கி, அரைப் பட்டினி கிடந்து, துன்பப்பட்டு, துயரப்பட்டு ஆளாக்குவதோடு நிறுத்திக்கொண்டார்கள்?

மிகுந்த ஏழைக்குடும்பத்தில் கூட விலை உயர்ந்த மோட்டர் பைக் வேண்டும், இல்லையென்றால் செத்துப் போவேன் என்று அடம் பிடிக்கும் பிள்ளைகள் இருக்கின்றனர். தமது பெற்றோர்கள் படும் துயரம் அவர்களை ஒன்றுமே செய்வதில்லை.

இப்படி ஒரு பொறுப்பற்ற சமூகத்தை நாம் ஏன் உருவாக்கினோம்?

தமிழ்நாட்டின் தொழில் அமைச்சர் கொடுத்த ரீல்ஸ் வீடியோவைப் பார்த்தும் உங்களுக்குப் பதறவில்லையா?

நமது வளர்ச்சியே நம்மை அழித்துவிட்டது.

(மூத்தோர்களிடம் இருக்கும் திமுக வெறுப்பு, அக்கட்சியை எப்படியாவது எவனாவது தோற்கடித்தால் போதும் என்று நினைக்க வைத்தது இந்த வீழ்ச்சியைத் துரிதப்படுத்துவிட்டது).

அமுதன் ஆர்.பி.
ஆவணப்பட இயக்குனர்
சென்னை

28 மே 2026

தேர்தலுக்குப் பின் : 09

 தவெகவிடம் பெரும்பாலான தமிழர்கள் எதிர்பார்ப்பது என்னவென்றால், திமுகவைப் போல செயல்படுவதாக நடிக்கவேண்டும் என்பதே. பாஜகவின் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம். ஆனால் பாஜவை எதிர்ப்பது போலவும் நடிக்கவேண்டும். எப்படியாவது திமுகவின் தீவிர பார்ப்பனிய எதிர்ப்பு அரசியலின் தாக்கத்தைத் தடுக்கவேண்டும்.

அதற்காக விஜய் எத்தனை 'கரூரை' நிகழ்த்திவிட்டு ஓடி ஒளிந்தாலும் சரி. நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.

27 மே 2026

தேர்தலுக்குப் பின் 08

 இசைஞானியை அவனே இவனே என்று திட்டும் போதே தமிழர்கள் செத்துவிட்டார்கள். அடுத்து ஆர்.ஜே.பாலாஜி முதல்வர் ஆனாலும் ஆச்சர்யமில்லை!


28 மே 2026

பவன் கல்யாணின் கேலி!

பவன் கல்யாணின் இந்தக் கேலிப்பேச்சை, தற்குறிகள் - சமூக ஊடகங்களில், தொலைக்காட்சிகளில் (புதிய தலைமுறை) - மடைமாற்றி, அவர் விஜய்யைப் பார்த்துப் பொறாமைப்படுவதாகக் கூறி ஏமாற்றி வருகின்றனர்.

அவர் நம்மை அவமானப்பத்துகிறார் என்பதே தெரியாத அடிமுட்டாள்கள் நாம்!

அதையும் தவெக ஆதரவாளர்கள் திரித்து தமக்குச் சாதகமாகப் பரப்புவது பவன் கல்யாண் சொல்வது எவ்வளவு உண்மை என்பது மீண்டும் நிரூபணமாகிறது.

தமிழக வாக்காளர்கள் 'அக்மார்க் அப்பாவிகள்' என்பதை எம்ஜிஆர், ஜெயா, விஜய்காந்த், விஜய் வெற்றிகள் நிரூபிக்கின்றன.

திமுக அரசியல் மோசம் என்று விமர்சனம் செய்யும் இடதுசாரிகள், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், திமுகவை வீழ்த்தும் இந்தக் கோமாளிக்கூட்டத்தைத் தொடர்ந்து ஆதரித்து, தமிழ்நாட்டின் அரசியல் மேலும் சீரழிவதற்குத் துணை போயிருக்கின்றனர்.

திமுகவை விமர்சிக்கும் இப்படிப்பட்ட 'சுத்தவாதிகள்' திமுகவிற்கு மாற்றாக எந்தக் கட்சி, எந்த மாநிலத்தில் என்ன சாதித்திருக்கிறது என்பதையும் சொல்ல முடியாத கையறு நிலையில் எப்போதும் இருந்திருக்கின்றனர்.

திமுகவை நாங்கள் ஏன் ஆதரிக்கிறோம்? நமக்கு இதைவிட சிறந்த ஆயுதம் இதுவரை கிட்டியதில்லை. நம் முன் வைக்கப்பட்ட எந்த மாற்றும் திமுகவை விட எந்த முன்னேற்றத்தையும் கொடுக்கவில்லை. மாறாக தமிழ்நாட்டை மேலும் சீரழிக்கத்தான் செய்திருக்கிறார்கள்.

பவன் கல்யாண் சிரிப்பது திமுகவைத் தோற்கடிக்க நினைக்கும் இந்த 'சுத்தவாதிகளையும்' சேர்த்துத் தான்.

அமுதன் ஆர்.பி.
ஆவணப்பட இயக்குனர்
சென்னை

https://www.youtube.com/shorts/nU4uD06S9fg

27 மே 2026

எங்க பேஸ்கட்ட பாத்தாலே தெரியவேணாமா?


கடன் தள்ளுபடி மிகவும் குறைவாக உள்ளது என்று விஜய்க்கு எதிராக விவசாயிகள் போராடுவதைப் பார்க்கும் போது, வடிவேலுவின் நகைச்சுவை வசனம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

"எங்க பேஸ்கட்ட பாத்தாலே தெரியவேணாமா, தருவாய்ங்களா தரமாட்டாய்ங்களான்னு, இன்னும் பச்சப்பிள்ளயா இருக்கியேடா!"

அது போக இன்னும் பலர் மின்சாரம் வரவில்லை, பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று போராடும் போது அந்த வயித்தில இருக்கும் குழந்தையே நீங்க தாண்டா என்று சொல்லத்தோன்றுகிறது.

இதில் 2500, சிலிண்டர், தங்கம் எல்லாம் வருகிறது. அதையும் நம்புகின்றனர் பல அடப்பாவிகள்.

கூடுதலாக நாம் எவ்வளவு தற்குறிகள் என்பதை பவன் கல்யாணின் உரை ஒன்று வெட்ட வெளிச்சமாக்கிவிட்டது.

அதன் இணைப்பை காமெண்டில் இணைத்துள்ளேன்!

தமிழர்களே ஒரு காமெடி பீசு தான்!


27 மே 2026

வழி தவறிய ஊதாரி மகன்!

 தேர்தலின் போது கூட்டணிக் கட்சியாக முழுமனதோடு வேலை செய்யாது, தமது கட்சி வாக்குகளைக் கூட்டணிக்குக் கடத்தாது துரோகம் இழைத்தது போக, தவெக ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தது, அதற்கு திமுகவை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது என்று முன்னாள் தோழமைக் கட்சிகளின் குற்றப்பட்டியல் (crime list) நீண்டது.


தவெகவை இவர்கள் ஆதரிப்பது, திமுகவை ஓரங்கட்டுவதாக வெளியே தெரிந்தாலும் உண்மையில் ஆதவ் அர்ஜூனா பாணி அரசியல் நியாயப்படுத்தப்படுகிறது, இயல்பாக்கப்படுகிறது. அதற்குப் பின்னால் இருக்கும் பாஜக பாணி பாதுகாக்கப்படுகிறது. ஒளித்து வைக்கப்படுகிறது.

தவெகவை இவர்கள் ஓடிப்போய் ஆதரிக்கவில்லை என்றால், அதிமுக ஆதரவு கொடுத்திருக்கும். தவெக இன்னுமொரு அதிமுக என்றே வெளிப்பட்டிருக்கும்.

ஆனால், இப்போது திமுகவை நீக்கிய இந்தியா கூட்டணிக்கு பழைய தோழமைகள் இடம் கொடுத்துவிட்டார்கள். இதனால் சேதாரம் திமுகவிற்கல்ல.

இதற்கு முன்பு மக்கள் நலக் கூட்டணி அமைத்து திமுகவிடம் தமது ‘பேரம்’ பேசும் தகுதியை இழந்தவர்கள், இப்போது தவெகவை ஆதரித்து மேலும் திமுகவிடம் செல்வாக்கை இழந்து விட்டனர்.

இதற்கு முன்பு எத்தனையோ முறை திமுக தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் மீண்டும் அக்கட்சி எழுந்து ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இதே ‘தோழமைகள்’ மீண்டும் ‘சீட்டுகளுக்காக’ அறிவாலயம் வாசலைத் தேடி வந்திருக்கின்றனர்.

இருந்தும் காலை வாரி விடுகிற, முதுகில் குத்துகிற வேலையைத் தொடர்ந்து செய்கின்றனர்.

தமிழக வாக்காளர்கள் திமுகவை அலட்சியப்படுத்தி எதிரிகளுக்கு வாக்களித்து, துன்பப்பட்டு துயரப்பட்டு மீண்டும் திமுகவிடம் வருவது போல கூட்டணிக் கட்சிகளும் பாசப்போரை, பனிப்போரைத் திமுகவிடம் நடத்திக்கொண்டே இருக்கின்றனர்.

பைபிள் கதையில் வருவதைப் போல் வழிதவறிய ஊதாரி மகனைத் தொடர்ந்து மன்னிக்கும் தந்தையாக திமுக பெருந்தன்மையாக கம்பீரமாக நிற்கிறது.

எப்போது வேண்டுமானாலும் மகன் சொத்தில் பங்கு கேட்பான். பிரிந்து போய், ஆட்டம் போட்டு, அனைத்தையும் அழித்து பிச்சைக்காரனாய்த் திரும்பி வருவான்.

தந்தை மன்னித்தபடி இருக்கவேண்டும். இது தமிழக வாக்காளர்களுக்கும் பொருந்தும். தோழமைகளுக்கும் பொருந்தும்.

சீனியர் தற்குறி எம்ஜிஆர், அல்லிராணி ஜெயா, நாக்கு மடக்கி விஜயகாந்த் என்று செல்லப்பிள்ளைகள் நம்பி ஏமாந்த பட்டியல் தொடர்கிறது.

இதன் பொருள் திமுகவின் அரசியல் ஆழமானது, நுட்பமானது, நியாயமானது, நடைமுறைக்குச் சாத்தியமானது, வெற்றிகரமானது, நீடித்து நிலைக்கக் கூடியது. ஏனெனில் அதுவே நமது பிரச்சனைகளுக்குத் துல்லியமாகத் தீர்வளிக்கத்தக்கது. மற்றவை எப்போதும் மதிப்பு மிக்க தோழமைகளே!

அமுதன் ஆர் பி
ஆவணப்பட இயக்குநர்
சென்னை

பின்குறிப்பு : புதிதாக முளைத்த ஜென் சீ (Gen Z) ஊதாரிப் பிள்ளை தொழில் நுட்பத்தைக்கொண்டு சிறப்பாக ஏமாற்றுகிறான், நீ் ஏன் அவனிடம் தோற்றாய் என்று கேட்பது இன்னும் அபத்தம். பிள்ளைகள் வழிதவறித்தான் போகும். தந்தை அப்படிப்போகலாகாது. பிடித்த பேய் இறங்கும். வரலாறு நமக்குத் துணை நிற்கிறது.

26 மே 2026

என்ன ஒரு நகைமுரண்!

 சமூக ஊடகங்கள் வழியாக அவதூறுகள் மட்டுமே பரப்பி ஆட்சியைப் பிடித்த தவெக இப்போது அதே சமூக ஊடகங்களில் மாற்றுக் கருத்துக்களைப் பரப்புவோர் மீது வழக்குப் போடுகிறது.

என்ன ஒரு நகைமுரண்!

எந்த ஆயுதம் கொண்டு நீங்கள் அழிவை ஏற்படுத்தினீர்களோ அதுவே உங்களைத் தாக்கத் தொடங்கியுள்ளது.

எந்த இளையோரை நீங்கள் மூளைச் சலவை செய்தீரோ அவர்களே உங்களைத் தூக்கி எறிவார்கள்.

அவர்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட நாட்டை அவர்கள் பாதுகாப்பார்கள்.

26 மே 2026

நமக்கு எது நல்லது?

 கேரளாவில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து கலைஞர்களை, அறிவாளிகளை, படைப்பாளிகளை அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்வார்கள்.


புலம் பெயர்ந்த தமிழர்களும் அதையே செய்வார்கள்.

அதன் பொருள், தாம் நன்றாக இருக்கிறோம். அன்றாடப் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு விட்டோம். இப்போது நல்லவற்றை ரசிப்போம் என்பதாகும்.

ஆனால் தமிழ்நாட்டில் நாம் என்ன செய்கிறோம்?

பத்தாண்டுகளுக்கு முன்பே வறுமையை ஒழித்துவிட்டோம். ஏழ்மை இருக்கிறது. அதை கல்வி, வேலை வாய்ப்புகள், நலத்திட்டங்கள் ஆகியவற்றைக் கொண்டு சரி செய்ய முயல்கிறோம்.

பொருளாதாரத்தில், மனிதவள மேம்பாட்டில் வளர்ந்திருக்கிறோம். இந்த வளர்ச்சியைப் புரிந்து கொள்ளும் அறிவை, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவில்லை.

நமக்கு எது நல்லது என்கிற சாமர்த்தியத்தை வளர்த்துக் கொள்ளவில்லை.

நம்மை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வோர் யார் என்பதை அறியாத தற்குறிகள் நாம்.

குஜராத்தியர்களை எடுத்துக் கொள்ளுங்கள். பணம் சம்பாதிக்க, செலவழிக்க, சாமி கும்பிட, சாப்பிட என்று மகிழ்ச்சியாக இருக்கின்றனர். மோடி தான் 2002 இனப்படுகொலையை நடத்தினார் என்று தெரிந்தும் அவரைப் பதினைந்து ஆண்டுகள் முதல்வராக வைத்திருந்தனர். ஏனெனில் அவர் குஜராத்தின் வளர்ச்சியைப் பாதுகாத்தார். இப்போதும் பாஜக தான் ஆட்சியில இருக்கிறது. தமது வளர்ச்சிக்கு பாஜக தான் சரியென்று முடிவெடுத்தார்கள்.

கேரளாவை எடுத்துக்கொள்ளுங்கள். ஜாதி, மதம், கோவில், நம்பிக்கைகள், ஆணாதிக்கம், ஊழல் எதையும் விடவில்லை. ஆனால் ஒரு நவீன மாநிலத்தை உருவாக்க வேண்டும் நூறாண்டுகளுக்கு முன்பு யோசித்தனர். கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே வாக்களித்து தம்மை வளர்த்துக் கொண்டனர். பாஜகவைத் தள்ளி வைத்திருக்கின்றனர். தமது வளர்ச்சியை எப்போதும் பெருமையாக நினைக்கின்றனர்.

ஆனால் நம்மை வளர்த்து விட்டவர்கள் யார் என்று இன்னும் தமிழர்களுக்குத் தெரியவில்லை. அவர்களை திட்டுவதே முழு வேலையாகவே இருக்கின்றனர். எதிரிகள் சொல்லும் பொய்களை விடாது நம்புகின்றனர். தம்மைக் காக்கும் கட்சியை தோற்கடிப்பதில் மும்மரமாக இருக்கின்றனர். தமது நலன் முக்கியமென்று எப்போது உணர்வார்கள்?

உதயநிதியை துணை முதல்வராக்கலாமா என்று கொதிக்கின்றனர். உதயநிதி சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, துணை முதல்வராக எவ்வளவு சிறப்பாக செயல்பட்டார் என்று பார்க்க மறுக்கின்றனர். சனாதனத்தை ஒழிப்போம் என்று துணிச்சலாக முழங்கியதோடு அதில் உறுதியாக நின்றார். வழக்குகளை முறியடித்தார்.

ஒரு அரசியல்வாதியாக மிகுந்த மாண்போடு நடந்து கொண்டார். அவரை விட ஓடி ஒளியும் பொய்களை மட்டும் பேசும் விஜய் எப்படி சிறந்த தலைவராவார்?

தம்மை மதிக்கும் அரசியலைவிட, தம்மை மிதிக்கும் அரசியல் ஏன் தமிழர்களுக்குப் பிடிக்கறது? நிஜத்தை விட நிழல் ஏன் பிடிக்கிறது?

அமுதன் ஆர்.பி.
ஆவணப்பட இயக்குநர்
சென்னை

25 மே 2026

என்ன மாற்றம் நடந்திருக்கிறது?

 என்ன மாற்றம் நடந்திருக்கிறது?


அனுபவமற்றவர்கள் ஒரு நடிகர் தலைமையில் ஆட்சி அமைத்திருக்கின்றனர்.

கூடவே காங்கிரசும், விசிகவும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டணி மந்திரி சபையில் இருக்கின்றனர்.

பார்ப்பனர்கள் இருவர் மந்திரிகள்.

திமுக கூட்டணி உடைந்திருக்கிறது.

சென்னையில் திடீர் மி்ன்வெட்டு தவெகவிற்கு வாக்களித்த எளிய மக்களை வாட்டி வதைக்கிறது.

அரசாங்கமற்ற குழப்பநிலை நிலவுகிறது.

எந்த இன்ஃபளுயன்சர்ஸ் ரீல்ஸ் போட்டு மக்களை மயக்கினார்களோ அவர்களே நல்லாட்சி நடப்பதாக மேலும் வதந்திகளைப் பரப்புகின்றனர்.

மக்கள் தெருவில் இறங்கிப் போராடுகின்றனர்.

தவெக கட்சியினர் ஆலோசனை, மேற்பார்வை என்ற பெயரில் ஆட்சி அதிகாரத்தில் அத்துமீறல் செய்கின்றனர்.

டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு மேல் பணம் வாங்குவது ஊழியர்கள் தான் என்றும் அதற்கு நிர்வாகக் காரணம் தான் பின்னணி என்றும் நீதிமன்ற ஆணையே அதை ஆதரிக்கிறது என்றும் தவெக மந்திரி சொல்கிறார். ஆனால் பாட்டிலுக்குப் பத்து ரூபாய் நடிகர் விஜய் பிரச்சாரம் செய்தது பொய் என்று யாரும் ஒத்துக்கொள்ளவில்லை.

பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

தமிழ்நாட்டு அரசியல் அறிவுத் தரம் குறைந்திருக்கிறது.

இளைஞர்கள் வழக்கம் போல கலர் கலராக உடையணிந்து, ஜங்க் உணவைத் தின்றபடி, வதந்திகளைப் பரப்பியபடி, தமது தற்குறி வாழ்க்கையைத் தொடர்கின்றனர். பெற்றோர்கள் கர்வத்தோடு இதை ரசிக்கின்றனர்.

ஆதவ் அர்ஜுனா என்ற தரகர் தான் அரசின் பிரதிதிதியாக வெளிப்படுகிறார்.

வழக்கம் போல விஜய் ஒரு பட்டத்தரசர் போல தள்ளியே நிற்கிறார். வேடிக்கை பார்க்கிறார்.

திமுக வெறுப்பாளர்கள் வெளிவந்து மேலும் வெறுப்பைக் கக்குகின்றனர்.

வன்னியரசு மந்திரி ஆகியிருக்கிறார். அது மட்டும் தான் ஆறுதல்.

அமுதன் ஆர்.பி.
ஆவணப்பட இயக்குநர்
சென்னை

24 மே 2026

தேர்தலுக்குப் பின் 07

 “ஆக்‌ஷன் ஹீரோ மாதிரி வந்து காப்பாத்துவீங்கன்னு தானே நாங்க ஓட்டுப்போட்டோம். இப்ப எங்களுக்கு நீதி வேணும்” என்று அந்த ஏழைப் பெண் மட்டும் தான் நினைக்கிறாள் என்று நீங்கள் நினைத்தால் நீங்களும் தற்குறி தான்.

24 மே 2026

தேர்தலுக்குப் பின் 06 : இந்து புகைப்படம் சாட்சி!


 திமுகவை ஏன் தோற்கடித்தார்கள் என்பதை இன்று தி ஹிந்துவே கட்டம் கட்டிக் கூறிவிட்டது!

மகாராஷ்றா தான் இந்தியாவின் வளர்ச்சி எஞ்சின். யாரும் அவர்கள் உடன் போட்டி போடக்கூடாது!
அப்படி நடந்தால் முதலமைச்சரையேத் தோற்கடிப்போம்!

23 மே 2026



தேர்தலுக்குப் பின் 05

 இதே போல 108 இடங்களைத் திமுக பெற்று போதாமையை எதிர்க்கட்சிகளிடமிருந்து பதவி கொடுத்து பெற்றால் நடுநிலைவாயர்கள் என்ன சொல்வார்கள்?

23 மே 2026

ஜென்டில்மேன் கட்சி!

 ஜென்டில்மேன் கட்சி!


திமுக ஆட்சியில் இருந்த போது தவெக நண்டு சிண்டெல்லாம் முன்னாள் முதல்வரையே கண்டபடி திட்டினார்கள். திமுக தீயசக்தி என்று காரணமில்லாமல் வசை பாடினார்கள். சிறுவர்களுக்குப் பணத்தைக் கொடுத்துத் தெருத்தெருவாய்க் கூவ வைத்தனர். ஒருவர் முட்டாள் முதல்வர் என்றே சொன்னார். அப்போது கேட்க ஆளில்லை. முதல்வரே அமைதியாகக் கடந்து போனார். நடுநிலைவாயர்கள் தவெகவிற்கு திமுக அரசியல் எதிரி, அப்படித்தான் விமர்சிப்பார்கள் என்றார்கள். அது தேர்தல் உத்தி என்றார்கள்.

கரூர் சம்பவத்தில் தவெக நடத்திய சேதாரத்தை தாமே முன்னின்று முன்னாள் முதல்வர் சரி செய்தார். அவர் பத்து லட்சம் இழப்பீடு கொடுத்ததால் விஜய் 20 லட்சம் கொடுத்தார். ஓடிப்போனவனைப் பாவம் என்று ரூட் மாஃபியா ஒப்பாரி வைத்தது. குடல் பிதுங்கி செத்த குழந்தைகளைப் பார்த்து அழுத பள்ளிக்கல்வித்துறை மந்திரியைக் கேலி செய்தனர். உடனடியாக உதவி செய்தவரை இன்னும் சந்தேகப்படுகின்றனர். அவருக்கு முன்பே போன அதிமுக பிரமுகரை சட்டமன்ற உறுப்பினராகவே தேர்ந்தெடுத்து விட்டனர்.

பாட்டிலுக்குப் பத்து ரூபா என்று பாட்டுப் பாடினார் விஜய். இன்னும் அந்த வசூல் நடந்து கொண்டிருக்கறது. அந்த அவதூறுக்கு என்ன பதில்? இப்போது அந்தப் பணம் எங்கு போகிறது? டாஸ்மாக் ஊழியர்களின் விளக்கம் இப்போது மட்டும் ஏன் கோரப்படுகிறது? அவர்கள் எப்படி திடீர் வில்லன்கள் ஆனார்கள்?

முன்னாள் முதல்வரோ பார்த்துப் பார்த்து நலத்திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். வாட் எ ஜென்டில்மேன் என்றனர் எல்லோரும்.

கடைசியில் நடிகனுக்கு நூற்று எட்டு சீட்டு கிடைத்தது. நம்மைப் போன்ற ஆதரவாளர்களுக்கு நெஞ்சு வலி வந்தது தான் மிச்சம்.

தவெகவின் கண்மூடித்தனமான தாக்குதலும் பொய்ப்பிரச்சாரமுமே இந்த முடிவுக்குக் காரணம் என்கின்றனர் விற்பன்னர்கள். தவெகவிற்கு சரியான பதிலடியை திமுக தரவில்லை என்று இன்று அதே நடுநிலைவாயர்கள் விளம்புகின்றனர்.

இப்போது அ ராசா தமது மனக்குமுறலை, வெளிப்படுத்தினால் அதே முன்னாள் முதல்வர் , கட்சித் தலைவராக தமது கட்சியினரையே கண்டிக்கிறார். இன்னொரு ஆள் ஒரு தலித்தை விட்டு இன்னொரு தலித்தைத் திட்டுகிறதா திமுக தலைமை என்கிறார்.

கிரிக்கெட் மைதானத்தில் வீரர்கள் ஒருவருக்கொருவர் திட்டிக்கொள்வது தமது உணர்ச்சியை வெளிப்படுத்தவே. உணர்ச்சி முக்கியமல்லவா? அவர்களும் மனிதர்கள் தானே?

இரண்டு வருத்தம் திமுகவினருக்கு இருக்கலாம் / இருக்க வேண்டும். ஒன்று நல்லாட்சி கொடுத்தோம், ஒரு புதுக்கட்சியிடம் தோற்றுவிட்டோமே என்று. இரண்டாவது, உடன் இருந்தவர்கள் தோற்கடித்தவன் பின்னால் போனது. அவர்களுக்கு இந்தச்சூழலிலும் கோபம் வரக்கூடாதா?

டிஃபன்ஸ் / தற்காப்பு ஆடுவதே தான் திமுகவின் ஒழுங்கா? அஃபன்ஸ் / அடித்து ஆடவே கூடாதா?

இப்போதும் எல்லோரும் முன்னாள் முதல்வரை வாட் எ ஜென்டில்மேன் என்கின்றனர்.

உதயநிதி கூடத்தான் ஜென்டில்மேனாக இருக்கிறார். கனிமொழியும் அப்படித்தான். ஆனால் மற்ற கட்சிகளுக்கு அது வராதா?

அதெப்படி திமுக நன்மை செய்தால் அது அவர்களது கடமை. தமது வருத்தத்தை வெளிப்படுத்தினால் அது அத்துமீறல். அ ராசாவை எத்தனை முறை அடிப்பார்கள்? அவர் வீரியமாகக் கொள்கையை விளக்கினால் வாக்கு விழாது என்கின்றனர்.

அ ராசா இப்படி ஒரு விமர்சனம் செய்யும் போது அவரை தலித் என்று பார்ப்பதா, திமுக காரர் என்று பார்ப்பதா? உங்கள் வசதிப்படியா? இது காலம் அவர் சமூகநீதி அரசியலுக்கு பகுத்தறிவுக்கு ஆற்றிய பணிகளை இந்த ஒரு விமர்சனத்தால் விலக்கி வைப்போமா?

அ ராசா, திமுகவில் உயர்ந்த பொறுப்பில் இருக்கிற திராவிட இயக்கச் சிந்தனையாளர். பிறப்பால் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். 2ஜி தொழில்நுட்பத்தை ஏழைகளுக்குக் குறைந்த விலையில் கொண்டு சேர்த்ததற்காகத் தண்டிக்கப்பட்டவர். ஒரு வரலாற்றுப் பெட்டகம்.

அவருக்கு பெனிஃபிட் ஆஃப் டவுட் (benefit of doubt) ஏன் கொடுக்கப்படுவதில்லை? ஐம்பது பேரைக் கொன்றவனைக் கொண்டாடுவோருக்கு இந்த நியாயம் எப்படித் தெரியும்?

எத்தனை நாகரீக முட்டுக்கட்டைகள்!

https://www.google.com/imgres?imgurl=https%3A%2F%2Fi.ytimg.com%2Fvi%2FKMwuM0PuWKI%2Fmaxresdefault.jpg&tbnid=P-ht_osko3N7QM&vet=1&imgrefurl=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DKMwuM0PuWKI&docid=gk_hy7ycmeBH-M&w=1280&h=720&itg=1&hl=en-IN&source=sh%2Fx%2Fim%2Fm1%2F4&kgs=95ee43e2d52a3faf&shem=rimspwouoe

Amudhan R P

22 மே 2026

தில்லிக்கு மோடி, சென்னைக்கு விஜய்!

 ஏங்க மோடி 2014ல் இந்தியாவின் பிரதமரா வரும் போது விஜய் தமிழ்நாட்டின் முதல்வராக கூடாதா? என்கிறார் ஒரு நண்பர்.

அவர் அரசியல் நடிகர். இவரும் அரசியல் நடிகர். இவரும் ஒண்டிக் கட்டை. இவரும் பேட்டி கொடுக்க மாட்டார். இவருக்கு சோசியல் மீடியா துணை. அவருடன் ராம் விலாஸ் பாஸ்வான். இவருடன் திருமா.

மன்மோகன் சிங் காலத்தில் நாடு வளர்ச்சி அடைந்திருந்தது. தகவல் அறியும் சட்டம், நூறு நாள் வேலைத்திட்டம், வன உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அவரது நாகரிக அரசியல் வீக்னஸாகப் பார்க்கப்பட்டது.

இடதுசாரிகள் வறட்டு அரசியல் பேசி உறவை முறித்துக் கொண்டார்கள்.

மன்மோகன் சிங்கை மோடி தனிப்பட்ட முறையில் கடுமையாகச் சாடினார்.

ஊழலும் நிர்பயா வழக்கும் மக்களைத் திரட்டப் பயன்பட்டன.

ஊடகங்கள் விலை போயின.

இல்லாத 2ஜி ஊழலை எஸ்.பி. உதயக்குமார் வரை பேசினார்கள்.

மோசடியாலும் துரோகத்தாலும் மோடி ஆட்சி அமைத்தார். காத்துக்கொண்டிருந்த அத்வானி / எடப்பாடி ஓரங்கட்டப்பட்டார்.

அரசனை நம்பி மக்கள் புருசனைக் கைவிட்டார்கள். இல்லாத சொர்க்கத்தை நினைத்து இருக்கிற வீட்டைக் கொளுத்தினார்கள்.

நடுநிலைவாயர்கள் அப்போதும் வியாக்கியானம் பேசினார்கள்.

சரியாத்தானே போய்ட்டிருக்கு!

22 மே 2026

தேர்தலுக்குப் பின் 04

 'திமுக ஏன் தோற்கடிக்கப்படுகிறது?' என்கிற எனது பதிவு ரூட் மாபியாவையும் தாண்டி சமூக ஊடகங்களில் சுழன்றடிக்கிறது. பகிர்ந்த, பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி!

21 மே 2026

நோய்க்கு மருந்தா அல்லது மருந்துக்கு நோயா?

நோய்க்கு மருந்தா அல்லது மருந்துக்கு நோயா?

ஒரு அரசியல் கோட்பாடு என்பது முதலில் சமுதாயத்தில் இருக்கும் பிரச்சனைகளைப் பேசும். அதன் ஆழத்தைப் பேசும். அதன் வரலாற்றைப் பேசும். அதற்கான காரணிகளை ஆராயும். பிறகு அதற்கானத் தீர்வைப் பேசும். இது தான் பொலிடகல் ஐடியாலஜி.

தமிழ்நாட்டில் நாம் சமூகநீதி என்று பேசுவது இருப்பவற்றை எல்லோருக்கும் பகிர்ந்தளிப்பது அல்ல. அல்லது ஒடுக்கப்பட்டோருக்கு வாய்ப்பளிப்பது மட்டுமல்ல.

அங்கு தான் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. அதனால் தான் நாம் இந்த அரசியலினால் பலன் அடைந்திருக்கிறோம். மற்ற மாநிலங்களிலும் சமூகநீதி என்றொரு வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மாற்றம் ஏதும் நடக்கவில்லை. பொருளாதார, சமூக மாற்றம் எல்லோருக்கும் போய்ச் சேரவில்லை.

பாஜகவினர் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீமுக்கும், தலித்துக்கும், பெண்களுக்கும் உயர் பொறுப்பில் வாய்ப்பளிப்பத்தால் சமூகநீதி காப்பாற்றப்படுமா? ஆகாது. ஏனெனில் அவர்களின் அரசியல் கோட்பாடு தான் அவர்களை வழிநடத்தும். மனிதர்கள் வெறும் கருவிகள். அவர்களால் தனித்து இயங்க முடியாது.

இதை இன்னும் விளக்கினால், மதச்சார்பின்மை என்று சர்வதேச அளவில் பேசப்படுவதும் மகாத்மா காந்தி பேச முற்பட்டதும் ஒன்றல்ல.

ஐரோப்பாவில் அமெரிக்காவில் செக்யூலரிசம் என்பது மதத்தை ஒரு செயல்பாட்டிலிருந்து அகற்றுவது தான். ஆனால் காந்தியார் வழியில் நாம் பயன்படுத்தும் மதச்சார்பின்மை இந்தியாவில் மதச்சிறுபான்மையினருக்கு பாதுகாப்பும் முக்கியத்துவமும் கொடுப்பது.
அது போல ஒரு வார்த்தைக்கு, எவ்வளவு அரசியல் முக்கியத்துவமான வார்த்தையாக இருந்தாலும் அதன் காண்டெக்ஸ்ட் (context) முக்கியம்.

இப்போது சமூகநீதிக்கு வருவோம்.

திராவிட அரசியல் இந்தியாவின் தலையாயப் பிரச்சனையாக சனாதனத்தைப் பார்க்கிறது. அதனால் தான் தனது அரசியல் வாழ்க்கைக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும் உதயநிதி சனாதனத்தை ஒழிப்போம் என்கிறார்.

பிறப்பால் நம்மிடையே ஏற்றத் தாழ்வு பார்க்க வைப்பது பார்ப்பனியம். அது தான் சனாதனத்தின் ஆணிவேர். இங்கிருக்கும் ஜாதிகளிடையே வேறுபாடுகள் இருக்கலாம். ஒவ்வொருவரும் வெவ்வேறு சாமிகளைக் கும்பிடலாம், அவரவர்க்கென்று குறிப்பிட்ட பண்பாடுகள் இருக்கலாம். இதை நீங்கள் வட கிழக்கு இந்தியாவில் இருக்கும் நூற்றுக்கணக்கான பழங்குடியினரிடையே காணமுடியும். அவர்களிடையே வித்தியாசங்கள் இருக்கும். ஆனால் நிரந்தரமான ஏற்றத்தாழ்வுகள் (constant hierarchies) இருக்காது.

ஆனால் 'மெயின்லேண்ட் இந்தியாவில்' பரவியிருக்கும் ஆயிரக்கணக்கான ஜாதிகளுக்கிடையே நிரந்தரமான ஏற்றத்தாழ்வுகளைப் புகுத்தி அவர்களை 'வெப்பனைஸ்' (weaponise) செய்வது பார்ப்பனியமே. எல்லா ஜாதியினரும் இந்த ஏற்றத்தாழ்வைப் பாதுகாக்கப் பணிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதை அடையாளம் கண்டு பார்ப்பனியத்திற்கு எதிராக, அதற்கானத் தீர்வை உருவாக்குவதே சமூகநீதி அரசியல்.

ஏழு தலித்துகளையும் இரண்டு பார்ப்பனர்களயும் தவெக மந்திரிசபையில் இணைத்திருப்பது இந்த சமூகநீதி அரசியலை மறுதலிப்பது தான்.

இதை மூன்று விதமாகப் புரிந்து கொள்ளலாம்.

நடந்து முடிந்த தேர்தலில் தலித்துகள் கணிசமாக தவெகவுக்கு வாக்களித்திருக்கின்றனர் என்பது தெரிய வருகிறது. அவர்கள் ஏற்கனவே இருக்கிற கட்சிகளின் மீது நம்பிக்கை இழந்து, தவெகவிற்கு அக்கட்சி தமது வளர்ச்சிக்கு தகுந்த வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என்று எண்ணி வாக்களித்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொண்டால், அந்த வாக்காளர்களுக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமாகவும், கைமாறாகவும், அந்த வாக்கு வங்கியை நிரந்தரமாக தன் வசப்படுத்தவும் தவெக முடிவெடுத்திருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.

இரண்டாவதாக, திமுக அல்லது திராவிட அரசியலின் மீதான தலித் அறிவுஜீவிகளின், களப்பணியாளர்களின் அதிருப்தியை, கோபத்தை, விமர்சனத்தை, அவர்கள் கடந்த பல பத்தாண்டுகளாக திராவிட அரசியல் சூத்திரர்களுக்கானது, அது தலித் விரோத சித்தாந்தம் என்று கட்டமைத்து வந்திருக்கும் வாதத்தைப் பிரதிபலிக்கும் வகையில் - பாஜக சோசியல் எஞ்சினியரிங் (social engineering) மூலம், பட்டியிலின வெளியேற்ற வாதத்தை முன்வைத்தது போல - இந்த அமைச்சரவை துறை ஒதுக்கீடு நடந்திருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

மூன்றாவதாக, மாயாவதியைப் போல பார்ப்பனர்களையும், தலித்துகளையும் கொண்ட அரசியலைக் கட்டமைப்பது. அதன் மூலம் பதட்டம் அடையும் சூத்திர ஜாதி தலைவர்களை அதிமுகவின் பக்கம் ஓரங்கட்டுவது. இது பாஜகவின் யோசனையாகவே தெரிகிறது.

இதன் படி, சமூகநீதி என்பது இடங்களைப் பகிர்ந்து கொள்வது தானே ஒழிய, அதற்குப் பின்னால் இருக்கும் பார்ப்பன எதிர்ப்புக் கோட்பாட்டை நிராகரிப்பது என்று தவெகவின் இந்த அமைச்சரவை முடிவு நமக்கு உணர்த்துகிறது.

இந்து அறநிலையத்துறைக்கு ஒரு பார்ப்பனரை அமைச்சராக நியமித்தது, அந்தத் துறை உருவாக்கப்பட்டதற்கான வரலாற்றையே அவமானப்படுத்துவதாகும். இங்கிருக்கும் இந்து ஆலயங்கள், சனாதனத்தின் கூடாரங்களாக இருக்கின்றன என்றும் அவற்றை எல்லோருக்குமான இடமாக மாற்ற வேண்டும் என்றும் தான் திராவிட அரசியல் போராடிக்கொண்டிருக்கிறது. அதன் உச்சபட்ச கோரிக்கையாகத் தான் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கவேண்டும் என்ற முழக்கம் வைக்கப்படுகிறது. அதற்கான கல்லூரிகளை உருவாக்கி, பார்ப்பனர் அல்லதோர் வகுப்பிலிருந்து அர்ச்சகர்களை உருவாக்கி, அவர்களை பல கோயில்களில் பொறுப்புகளைக் கொடுத்து, அதற்கான பல சட்டப்போராட்டங்களை நடத்தி வருகிறது திராவிட அரசியல்.

அதே போல இந்து அறநிலையத்துறையைத் திட்டமிட்டு ஒரு செக்யூலர் அமைப்பாக, அதன் பணத்தைக் கொண்டே கல்லூரிகள் நடத்துவது, அதை எல்லோருக்குமான இடமாக மாற்றுவது ஆகிய வேலைகளை கடந்த திமுக அரசு செய்து வந்தது. இதை சனாதனவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். இந்து ஆலயங்கள் இந்துக்களுக்கே சொந்தமானவை என்று ஆக்ரோஷமாக முழங்கினார்கள். ஆனால் எந்த இந்துக்கள் என்று கேட்டால் மெளனமாகிவிடுவார்கள். அதற்கு தவகெ அரசு தெளிவான பதிலைக் கொடுத்திருக்கிறது. கோயில் எல்லோருக்குமானது அல்ல. அது ஒரு குறிப்பிட்ட அரியவகை இந்துக்களுக்கே என்பது அந்த பதில்.

அதே போல் இரண்டு பார்ப்பனர்களை அமைச்சர்களாக்குவதும், திமுகவிடம் இருந்து தாம் மாறுபட்ட அரசியலைப் பின்பற்றப் போகிறோம் என்பதையும் தவெக நிரூபித்திருக்கிறது.

அரசியல் என்பது பங்கேற்பு என்றால், அதற்கான சித்தாந்தக் காரணங்கள் வேண்டும். டோகனிச / சம்பிரதாய வெளிப்பாடு அரசியல் பங்கேற்பையே கேலிக்கூத்தாக்கும்.

இதையே தான் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் பல சித்துவிளையாட்டுக்களை நடத்தியிருக்கின்றனர். எம்ஜிஆர் பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்றார். ஜெயா மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

இவற்றை நாம் வெறும் அரசியல் முதிர்ச்சி அற்றத் தன்மை என்றோ, அனுபவமின்மை என்றோ பார்க்காமல், தமிழ்நாட்டு அரசியலை நீர்த்துப் போகச் செய்யும் தந்திரக்கார நடவடிக்கை என்று பார்க்கவேண்டும்.

அமுதன் ஆர்.பி.
ஆவணப்பட இயக்குனர்
சென்னை

21 மே 2026

திமுகவைத் தனிமைப்படுத்துதல்!

திமுகவைத் தனிமைப்படுத்தும் அரசியல் படுஜோராக நடந்துகொண்டிருக்கிறது.

கண்டிப்பாக இது தவெகவின் வேலை மட்டுமல்ல.

சட்டமன்றத்தில் உதயநிதி பேசியதைப் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும் தோல்விக்குப் பிறகான அரசியலுக்கு திமுக தயாராகி விட்டதென்று.

இதற்கான எதிர்வினை தான் தோழமைக்கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பதென்பது. திமுக மீண்டுவரக்கூடாது. மக்கள் மத்தியில் விஜய் தடுமாறுவது போன்ற செய்தி போகக்கூடாது என்பது தான் திட்டம். இது ஒரு பெர்ஷப்சன் வார் (perception war). நிஜத்தை விட தோற்றங்கள் தான் சக்தி மிக்கவை. பங்கு சந்தை போல, யார் மேலே, யார் கீழே என்கிற விளையாட்டு காட்சிப்பொருளாக நடக்கிறது.

இப்போதாவது தமிழக மக்கள் புரிந்துகொள்ளவேண்டியது, இங்கு நடப்பது நீங்கள் வாக்களித்தது போல, பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு, சட்ட ஒழுங்குப் பிரச்சனை அல்ல. அது வெறும் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட சொற்கற்கள்.

இங்கு நடப்பது திராவிட மாடல் போன்ற ஆட்சியை திமுகவை அகற்றிவிட்டு, தவெக மற்றும் தோழமைக் கட்சிகளுடன் தொடர்வது என்பதே. அதனால் தான் விஜய், எடப்பாடியைச் சந்திக்கவில்லை. ஆனால் அதிமுக பிரிவினரைச் சந்தித்தது, திமுகவின் தோழமைக் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கவே.

இதை யார் செய்கிறார்கள்?

கண்டிப்பாகத் திமுக எனும் கட்சியை எதற்கோ தடையாகப் பார்க்கிற சக்திகள் தான் இந்த கண்ணுக்குத் தெரியாத காய் நகர்த்தலைச் செய்கின்றனர்.

கண்டிப்பாக இவர்களுக்கு திமுக குடும்ப ஆட்சி, பண்ணையார் கட்சி, சில ஜாதிகளே அந்தக் கட்சியை வழிநடத்துகின்றன என்பதல்ல பிரச்சனை.

திமுக எதையோ ஒன்றை அல்லது ஒரு தொகுப்பை உறுதியாகக் கடந்த ஐந்தாண்டுகளில் செய்திருக்கிறது. அது இந்த ஆளும் வர்க்கத்திற்கும், இந்தி, இந்து, இந்தியாவிற்கும் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது.

இந்தச் சதியில் காங்கிரசும் உடந்தை என்பது, கேரளாவில் அவர்கள் பெற்ற மாபெரும் வெற்றி நிரூபித்திருக்கிறது. ஏனெனில் திமுக அணியின் தோல்வியை சீட்டுப் பேரச் சிக்கல் மூலம் தொடங்கி வைத்தது காங்கிரஸ் தான். அவர்கள் தவெகவுடன் போகாமல் திமுக அணியை மூழ்கடித்தது வெளிப்படை.

சோஷியல் எஞ்சினியரிங் அரசியலை பாஜக பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் - பட்டியலின மக்கள் வெளியேற்றம், கவுண்டர்கள் - வன்னியர்கள் ஒருங்கிணைப்பு, சசிகலாவை சிறையிலடைத்தது, பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு, அதிமுக அழிப்பு - என பல கட்டங்களில் செய்தது.

அதன் ஒரு அங்கமாக, தோழர் திருமா அவர்களை திமுக அணியிலிருந்து பிரித்தெடுக்க பல முயற்சிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து கொண்டு தான் இருந்தன. அந்த முயற்சியை எதிர்கொள்வதில் தோழர் கடும் நெருக்கடிக்கு உள்ளானார் என்பதை நாம் பார்த்தபடி தான் இருக்கிறோம்.

திமுகவுடன் உறவைத் தொடர்வதற்காக திருமா கடும் எதிர்ப்பை அவரது ஆகரவாளர்களிடம் இருந்து எதிர்கொள்ள வேண்டியிருந்ததையும் நாம் கண்கூடாகப் பார்த்தோம். எட்டு சீட்டுகளைப் பெற்றதற்கே அவர் கடும் எதிர்ப்பைச் சந்தித்தார் (ஆறிலிருந்து எட்டு என்பது வளர்ச்சி தான்; ஆனால் அது பெரும் குற்றமாகச் சித்தரிக்கப்பட்டது; அதற்கு முன்பு தான் நான்கு உறுப்பினர்களை முதன்முறையாகப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக விசிக தம்மை நிறுவியிருந்தது; அதற்கு திமுக கூட்டணி மிக முக்கியமான பங்கு வகித்திருந்தது). ஆளூர் ஷாநவாஸ் ஓரங்கட்டப்பட்டது இந்த அரசியலின் ஒரு பகுதி தான். திமுகவை நட்போடு விசிகவில் யாரும் பார்க்கக்கூடாது என்கிற வாதம் பரவத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

விஜய் கட்சி ஆரம்பித்ததிலிருந்து ஊடகங்கள் தோழர் திருமா அவர்களைக் கேள்வி மேல் கேள்வி கேட்டபடியே இருந்தனர். ஆட்சியில் பங்கு தருகிறாரே அவர், நீங்கள் ஏன் போகக்கூடாது? என்று அவர் தொடர்ந்து அழுத்தப்பட்டார். திமுகவுடன் உறவு வைத்துக்கொண்டதற்காக அவர் பூடகமாக மன்னிப்புக் கோரியபடியும் விளக்கம் கொடுத்துக்கொண்டும் இருந்தார்.

இப்போது, "தீயசக்தி" என்று நடிகர் விஜய்யால் அழைக்கப்பட்ட திமுகவின் ஆதரவால் வெற்றி பெற்ற கூட்டணிக்கட்சிகள் ஏறக்குறைய அனைவரும் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததும், இப்போது விசிக மந்திரிசபையில் பங்கேற்பதும், இந்த "தொலைநோக்குப் பார்வையின்" ஒரு அங்கம் தான்.

திமுக இதனால் உற்சாகம் தான் அடையவேண்டும். அது தமது அரசியலை இன்னும் சுதந்தரமாக, துணிச்சலாக வெளிப்படுத்தலாம். திமுகவின் முக்கியத்துவத்தை, இந்த grand spectacle நமக்குக் கூடுதலாக வெளிப்படுத்தியிருக்கிறது.

திமுக மீண்டும் வெற்றி பெற்றிருந்தால், இந்தியா கூட்டணிக்கே மு.க.ஸ்டாலின் அவர்கள் புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கலாம். அதை "அன்பர்கள்" உணர்ந்திருக்ககூடும்.

அது மட்டுமின்றி தமிழ்நாட்டின் பிரமாண்ட பொருளாதார வளர்ச்சி, கூடவே கடைபிடிக்கப்படும் சமூகநீதி, மதச்சார்பற்ற அரசியல் ஆகியவை இந்திய மத்தியத்தர வகுப்பினரின் நன்மதிப்பைப் பெறத் தொடங்கியது பாஜக கட்டமைத்த 'வளர்ச்சி வேண்டுமெனில் சங்கியாக இருப்பதே சரி' என்ற வாதத்தை முறியடிப்பது தானே.

எனக்குத் தெரிந்த தமிழ்நாட்டுக்கு வெளியே பயணிக்கும் பல தமிழர்கள் கடந்த மூன்றாண்டுகளில் இதை உணரத் தொடங்கியிருந்தனர். "உங்களுக்கு என்னப்பா, ஸ்டாலின் இருக்காரு" என்கிற வார்த்தை பரவத் தொடங்கியிருந்தது. கேரளாவிலேயே பலர் என்னிடம் இப்படிச் சொல்லியிருக்கின்றனர் (வட இந்தியாவில் வாழ முடியாமல் தெற்கே குடிபெயர்ந்த மத்தியத்தர வர்க்கதினர் பலர் இருக்கின்றனர். கல்வி, வேலை, அமைதியான சூழல், பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப வசதிகள் எல்லாம் இந்தப் புலம்பெயர்தலை ஊக்கப்படுத்தின).

அதை முறியடிக்கத் தான் கொளத்தூரிலேயே ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார்.

பாஜகவின் பெருத்த, சந்தேகத்துக்குரிய மெளனம் தான் இதற்கு சாட்சி!

பின்குறிப்பு :

மாயாவதி போல, திருமா அவர்கள் தனித்த அரசியல் செய்யவேண்டும் என்று அவரது ஆதரவாளர்களின் நீண்ட நாள் அவா நிறைவேறுவது மகிழ்ச்சி.

திருச்சி கிழக்கில் தவெக அணி சார்பாக திருமா போட்டி போட்டால், திமுக அவரை ஆதரிக்கவேண்டியக் கட்டாயத்திற்கு ஆளாவார்கள். எதிர்த்துப் போட்டியிட்டால், திருமா மந்திரியாவதைத் தடுத்த பழியைச் சுமக்க நேரிடும்.

அதனால் திமுக மேலும் தனித்து விடப்படும்.

நான் முன்பே சொன்னது போல, அது கட்சிக்கு மிகவும் நல்லது. நிறைய மறுசீரமைப்பு செய்வதற்கும், புதிய ஆட்களைக் கொணர்வதற்கும், இன்னும் கூர்மையாக வேலை செய்வதற்கும், பழைய தடைகளைக் களைவதற்கு இது ஒரு நல்வாய்ப்பாக அமையும்.

தோழர் திருமாவுக்கு எனது அன்பான வாழ்த்துகள்.

அமுதன் ஆர்.பி.
ஆவணப்பட இயக்குனர்
சென்னை

21 மே, 2026

தமிழ் சினிமாவும் தற்குறிக்கலாச்சாரமும்!

 தமிழ் சினிமாவும் தற்குறிக்கலாச்சாரமும்!


தவெகவிற்கு எதற்கு வாக்களித்தீர்கள் என்றால் "இவுங்களே இருக்காங்களே, இவருக்குத் தான் கொடுத்துப் பார்ப்போமே" என்கிறார் ஒரு வயதானவர்.

இதற்கு முன்பிருந்தவர் என்ன செய்தார் என்றால், அவர் அருமையாகத் தான் வேலை செய்தார் என்கிறார் அதே நபர்.

பிறகு ஏன் மாற்றிப்போட்டீர்கள் என்றால் என் மகன் அந்தக் கட்சியில இருந்தான், அதனால் போட்டேன் என்கிறார்.

உங்க வேட்பாளர், இன்றைய சட்டமன்ற உறுப்பினர் யார் என்றால் தெரியாது என்கிறார்.

இப்படி ஒரு விளையாட்டுத்தனமாக, அப்பாவித்தனமாக, தொலைநோக்குப் பார்வையில்லாமல் ஏன் வாக்களித்தார்கள், ஏன் தேர்தல் அரசியலை இப்படி அணுகிறார்கள் என்று யோசித்துப் பார்த்தால், அதற்கு தமிழ் சினிமா ஒரு முக்கியக் காரணம் என்று தோன்றுகிறது.

அரசியல்வாதி என்றால் ஊழல் செய்பவன், அதிலும் கருப்பாக இருப்பவன் செய்யும் ஊழல் தான் மிகவும் கொடூரமானது, அவர்களை நம்பாதே, வேட்டி கட்டின அரசியல்வாதி, தூய தமிழில் பேசுகிற அரசியல்வாதி, அவனுக்கு அறிவு கிடையாது, அவனிடம் பண்பு இல்லை, ஒழுக்கங்கெட்டவன், பல பெண்களுடன் சல்லாபம் கொள்பவன், கொலை செய்வான், கொடூரமானவன், கொள்ளை அடிப்பான், தேர்தல் ஆதாயத்திற்காக, பதவிக்காக, எதையும் செய்வான் என்ற பிம்பத்தை உருவாக்கியதில் தமிழ் சினிமாவிற்கு முக்கிய பங்குண்டு.

நிறையப் பேர் நிஜவாழ்க்கையில் முதன் முதலாக அரசியல்வாதியைப் பார்த்துவிட்டு, என்ன சார் இவ்வளவு டீசண்டா இருக்காரு? நான் இதை எதிர்பார்க்கவேயில்லை என்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு அரசியல்வாதி என்றாலே அலர்ஜியை உருவாக்கிக் கொடுத்தவர்கள் நமது சினிமா இயக்குனர்கள். நிஜத்தில் அப்படி இல்லை என்றதும் ஆச்சர்யப்படுகிறார்கள்.

சரி, அப்படி என்ன தான் இந்த சினிமாக்காரர்கள் அரசியல்வாதியைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள் என்றால் அதுவும் அறிவுப்பூர்வமாக இருக்காது, எல்லாமே மேம்போக்காக, திரைக்கதையின் சுவாரஸ்யத்திற்காக, எதையாவது தடாலடியாக, ஆதாரமில்லாமல், அரைகுறையாக ஆராய்ச்சி செய்து சினிமா என்று எடுத்துவிடுகிறார்கள்.

ஷங்கர் இயக்கிய ஜெண்டில்மேன், முதல்வன், இந்தியன், எந்திரன் ஆகிய திரைப்படங்களில் அரசியல்வாதி ஊழல் மட்டுமே செய்பவனாக, கொள்கை எதுவும் இல்லாதவனாக, அப்பட்டமான சுயநலவாதியாகத் தான் காட்டியிருப்பார்.

அதுவும் ஒரு நாள் முதல்வன் என்ற கதை தான் அதிஅற்புதம். அரசியல் என்பது கூட்டு முயற்சி என்பதையும், அரசியல்வாதிக்கு கொள்கை இருக்கும் என்பதையும், அவர்கள் மக்கள் நலன் மீது அக்கறை கொண்டு திட்டங்கள் தீட்டுவார்கள் என்பதையும் முற்றிலுமாக மறுதலித்த படம் அது. அரசியல்வாதி என்பவன் சமூகத்தின் பிரதிநிதி தான், நமக்கு இருக்கும் நிறைகுறைகள் அவனிடம் இருக்கும் என்பதை புறந்தள்ளி, ஒரு நாளில் ஊழலை ஒழிப்பது, நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது என்பது சிறுபிள்ளைத்தனமானது தானே! ஒரு கதாநாயகன் வந்து எல்லாவற்றையும் தீர்த்துவைப்பான் என்று நினைப்பது அப்பாவித்தனத்தின் உச்சம்.

அதே போல, ஏற்கனவே நம்மிடம் சில கனவுகளை நமது தமிழ் சினிமா விதைத்து வைத்திருக்கிறது. ஒரு நாள் முதல்வன் வருவான், அவனுக்கு வாக்களிப்போம் என்று காத்திருந்திருக்கிறோம். அந்த நபர் வந்ததும், வாக்குகளை அழுத்திவிட்டோம்.

தவெக, மக்கள் மத்தியில் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி ஒரு தந்திர விளையாட்டு நடத்திவிட்டதாக பல ஆதாரங்கள் வெளிவருகின்றன. ஆனால் அந்த தந்திரங்களுக்கு நமது வாக்காளர்கள் ஏன் ஈடுகொடுத்தார்கள் என்ற கேள்வியை நாம் கேட்கத்தான் வேண்டும். எல்லோரும் எல்லாத் தந்திரங்களுக்கும் ஆட்படுவதில்லை. நமக்குப் பிடித்த போதையைத் தான் நாம் தேர்வு செய்கிறோம்.

இத்தாலிய மார்க்சியவாதி ஆண்டோனியா கிராம்சி, வெகுமக்கள் மீது ஆதிக்கம் செலுத்த வன்முறை தேவையில்லை, அவர்களிடம் ஒரு ஒத்தக்கருத்தை (consent) உருவாக்கினால் போதும். அவர்களே ஆதிக்கத்தை (hegemony) ஏற்றுக்கொள்வார்கள் என்றும், அந்த ஒத்தக்கருத்தை உருவாக்க சிவில் சமூகத்தின் கூறுகளான பள்ளிக்கூடம், ஊடகம், கோயில், தொழிற்சங்கங்களும் பயன்படுத்தப்படும் என்கிறார்.

திராவிட அரசியல்வாதிகளுக்கு எதிரான எதிர்மறையான ஒத்தக் கருத்தை வெகுமக்கள் மத்தியில் உருவாக்குவதில் தமிழ்சினிமா பெரும் பங்காற்றியிருக்கிறது என்பதை வெளிப்படையாக நாம் உணரலாம். பல பத்தாண்டுகளாக ஏற்றப்பட்ட விஷம் இப்போது தனது வேலையைக் காட்டியிருக்கிறது.

ஷங்கர் மட்டுமின்றி மணிரத்னம் இயக்கிய இருவர், ஆயுத எழுத்து ஆகிய படங்களும், இயக்குனர் மணிவண்ணனின் பல படங்களும் திராவிட அரசியலின் மீது விமர்சனம் என்ற பெயரில் வெறுப்பை உமிழ்ந்தே வந்திருக்கின்றன. இயக்குனர் மணிவண்ணனின் திமுக வெறுப்பு பற்றி எழுத்தாளரும் பேச்சாளருமான வே மதிமாறன் நிறையப் பேசியிருக்கிறார். ஆர்வமிருப்போர் அவசியம் பார்க்கவும்.

மதுரையில் 90களில் பிற்பகுதியில் நடத்தப்பட்ட பெரியார் பற்றிய கருத்தரங்கில் பேசிய ஈழத்து மார்க்சிய சிந்தனையாளர் கார்த்துகேசு சிவத்தம்பி, இருவர் படம் பற்றிக் குறிப்பிடும்போது, திராவிடத்தலைவர்கள் இருவரும் பெண்கள் பின்னால் சுற்றிக்கொண்டிருந்தனர் என்று மணிரத்னம் படம் எடுத்திருக்கிறார் என்று வருத்தப்பட்டார்.

அதே போல மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து திரைப்படத்தில் திராவிடக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கதாப்பாத்திரத்தில் (வில்லன் தான்) பாரதிராஜா நடித்தது பற்றி புலிகள் தலைவர் பிரபாகரன் வருத்தப்பட்டதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இயக்குனர் சேரன் எடுத்த ‘தேசிய கீதம்’ எனும் படத்தில் மாநில முதல்வரை சில புரட்சிகர இளைஞர்கள் கடத்திப் போய் கிராமத்தில் வைத்துப் போராடுவதாக எடுத்திருப்பார். அந்தப் படம் வந்த போது, ஜெயலலிதா தான் முதல்வர். ஆனால் ஒரு ஆண் முதல்வரைத் தான் இயக்குனர் வில்லனாகச் சித்தரித்திருப்பார்.

கலைஞர் தான் தமிழ்நாட்டில் பேருந்துகளை தேசியமயமாக்கினார். அதனால் மூலை முடுக்கெல்லாம் நமக்குப் பேருந்து வசதி கிடைத்திருக்கிறது. இந்தியாவிலேயே அதிகப் பேருந்துகளைக் கொண்ட போக்குவரத்துத்துறை நமது மாநிலத்திற்குரியது தான். கலைஞர் தான் கிராமங்களுக்கு சாலைகள் போட்டார். மின்சார வசதி செய்து கொடுத்தார். நவீன தமிழ்நாட்டை உருவாக்கினார். ஆனால் கலைஞர் போன்ற தோற்றம் கொண்ட ஒரு முதல்வரைத் தான் தேசிய கீதம் படத்தில் இயக்குனரால் வில்லனாகக் காண்பிக்க முடிந்திருக்கிறது.

கலைஞரைத்தான் வில்லனாகச் சித்தரிக்கமுடிகிறது இவர்களால். ஜெயலலிதாவுக்கு எதிராக ஆணாதிக்க சிந்தனையுடன் மன்னன், மாப்பிள்ளை, படையப்பா போன்ற படங்களை எடுத்து தமது கோபத்தைத் தீர்த்துக்கொண்டார் ரஜினிகாந்த்.

இப்படிப் பல படங்கள் தமிழ் மக்களுக்கு அரசியல்வாதிகள் பற்றி குறிப்பாக திமுக தலைவர்கள் பற்றி அவதூறுகளை மட்டுமே பரப்பி, மேம்போக்கான அரசியலை அரைகுறையாகக் கற்றுக்கொடுத்ததன் விளைவு, இப்போது தவெக வெற்றி பெற்றிருக்கிறது.

பின்குறிப்பு : நல்ல அரசியல்வாதி என்றால் தமிழ் சினிமாவில் சிவப்புத் துண்டு போட்டவர் தான். அது வி சேகர் எடுத்த குடும்பச் சித்திரங்களாகவோ அல்லது வெற்றி மாறன் இயக்கிய 'விடுதலை’ படமாகவோ தான் இருக்கும். இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய 'சார்பேட்டா பரம்பரை' எனும் படத்தில் தான் திமுக பற்றியும் கலைஞர் பற்றியும் மாண்போடு சித்தரித்திருப்பார்கள்.

ஆனாலும் தமிழ்நாடு வளர்ந்த மாநிலம். இந்த வளர்ச்சி எப்படி நிகழ்ந்தது? யார் நிகழ்த்தியது? கள்ள மெளனம் தான் நமக்கு பதில்!

அமுதன் ஆர்.பி.
ஆவணப்பட இயக்குனர்
சென்னை

19 மே 2026

தமிழ்நாடு 'மாதிரி' ஏன் மறைக்கப்படுகிறது?

பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் வளர்ச்சி மாடல் பற்றி ஒத்தக் கருத்துள்ள தோழர்கள் இணைந்து சில உரையாடல்களைத் தொடங்கினோம்.

அப்படி நடத்திய தொடரில் ஒரு முறை மருத்துவத்துறையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றிப் பேச இடதுசாரிப் பேச்சாளர்களை சிறப்பு அழைப்பாளர்களாகப் பேச அழைத்திருந்தோம்.

அந்த உரையாடல்களின் நோக்கம், தமிழ்நாட்டின் வளர்ச்சி அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறதே, அதைப்பற்றி யாரும் பேசுவதில்லையே என்ற ஆதங்கத்தில் தான்.

தமிழ்நாட்டில் மருத்துவக்கட்டமைப்பு, மருத்துவக்கல்லூரிகள், சிறிய, பெரிய பொது மருத்துவமனைகள், அதனால் உருவாகியிருக்கும் தனியார் மருத்துவமனைகள், அதனால் உருவாகியிருக்கும் 'மருத்துவச் சுற்றுலா' (மெடிகல் டூரிசம் / medical tourism) என்ற போக்கு, சென்னை, இந்தியாவின் மருத்துவத் தலைநகரானது (medical capital of India) ஆகியவை பற்றி துறை விற்பன்னர்கள் விளக்கிப் பேசுவார்கள் என்று நினைத்தோம்.

ஆனால் வந்திருந்த அனைத்து முற்போக்குவாதிகளும் தமிழ்நாட்டில் எப்படி எதுவும் சரியில்லை என்ற வழக்கமான பட்டியலை வாசிக்கத் தொடங்கிவிட்டனர்.

தவெகவிற்கு இளைஞர்கள் கொத்துக் கொத்தாய்ப் போனதற்கு இது மாதிரியான எப்போதும் விமர்சனம் என்ற பெயரில் இடதுசாரி தோழர்கள் நடத்தும் எதிர்மறை அரசியலும் தான் காரணம்.

குறைகள் சொல்வது தவறில்லை, ஆனால் நாம் ஒரு மாநிலமாக எவ்வளவு முன்னேறியிருக்கிறோம் என்பதை ஜெயரஞ்சன் அவர்கள் பேசும் வரை யாரும் பேசவேயில்லை. நமது சாதனைகளைப் பேசுவது திமுகவின் வேலை என்று நாம் நினைக்கிறோம். அவர்கள் ஏன் இதை வெளியில் சொல்லவில்லை என்கிறோம்.

தமிழ்நாடு ஒரு மாநிலமாகத் தொடர்ந்து படிப்படியாக வளர்ந்து கொண்டே வந்திருக்கிறது. அதில் குறைந்த காலமே ஆட்சியிலிருந்திருந்தாலும் திமுக பெரும் பங்காற்றியிருக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் அது ஒரு உச்சத்தை அடைந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்பு நான் ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டேன். அங்கே பேசிய மருத்துவர்கள் சென்னையில் இருக்கும் மருத்துவ வசதிகள் பற்றிப் பெருமையாகப் பேசுகின்றனர்.

ஆனால் இடதுசாரிகள், அம்பேத்கர்வாதிகள், தமிழ்த்தேசவாதிகள் திராவிட அரசியலை ஒழிக்க வேண்டும் என்று நடத்திய தொடர் எதிர்மறை பிரச்சாரம், நமது மாநில சாதனைகளை இருட்டடிப்பு செய்து இன்று தவெகவின் வெற்றி வரை வந்திருக்கிறது.

தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றது தோழமைக் கட்சியினர் ஓடிப்போய் ஆதரவு கொடுத்ததும் ஜனநாயகத்தைக் காப்பாற்றவோ, எதேச்சையானதோ அல்ல என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

அமுதன் ஆர்.பி.
ஆவணப்பட இயக்குனர்
சென்னை

19 மே 2026

டாஸ்மாக் எதிர்ப்பு, ஊழல் ஒழிப்பு எனும் அப்பாவித்தனம்!

 டாஸ்மாக் கடைகளை எதிர்ப்பது என்பதும் ஊழலை ஒழிப்பதைப் போன்ற அப்பாவித்தனமான பொது நடவடிக்கையே!

உலகம் முழுக்க மது விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் பல மாநிலங்களில் அரசே மதுக்கடைகளை நடத்துகிறது.

தனியாருக்கு அந்த விற்பனை உரிமையைக் கொடுப்பதால் கடைகள் எண்ணிக்கை தான் அதிகமாகும். சரக்கு விலையும் அதிகமாகும். இப்போது இருப்பதை விட சுத்தமான மலிவு விலை பார்கள் உருவாகலாம். மதுப்பிரியர்களுக்கு இன்னும் வசதியாகவே இருக்கும்.

கண்டிப்பாகக் குடிப் பழக்கம் அதிகமாகும்.

அதைவிட கடை நடத்த ஏலம் எடுக்கும் உரிமையாளர்கள், சிண்டிகேட் அமைத்து அடிமாட்டு விலைக்கு கடைகளை ஏலம் எடுப்பார்கள். அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டு அது சரிக்கட்டப்படும்.

இப்போது வருகிற முப்பதாயிரம் கோடியும் வராது.

அதிகம் வந்தால், அதிகக் கடைகளும், அதிக விலைக்கும் விற்பனை நடக்கும்.

பரால்லையா?

பின்குறிப்பு :

அது போகக் குடி விசயத்தில் நாம் இன்னும் பின் தங்கிய மாநிலம் தான். தென்னிந்திய மாநிலங்கள் எங்கோ போய்விட்டனர். நல்ல சரக்கு, நல்ல கடைகள், நல்ல வசதிகளுடன் சந்தோசமாக வாழ்கின்றனர்.

வெளிநாட்டு முதலீட்டில் சென்னையுடன் போட்டி போடும் பெங்களூரு, ஹைதராபாத், பூனா, மும்பை, குருகிராம் போன்ற நகரங்களை ஒப்பிடும் போது நமது தலைநகரம் ஒரு கிராமம் தான்.

வெளிநாட்டவர், வடநாட்டவர் இங்கு வந்து தொழில் செய்யும் போது, அவர்களுக்கு சர்வதேசத் தரத்தில் இரவு வாழ்க்கை, கேளிக்கை முக்கியமானதாக இருக்கிறது.

அதை நம்மால் இந்தியாவின் பிற நகரங்களைப் போலக் கொடுக்கமுடியவில்லை. நமது ஒழுக்கவாதிளின் கட்டுப்பாடுகள் தான் காரணம்.

சென்னையில் இருக்கும் ஒரு ஒன்றிய அரசு கல்வி நிறுவனம் சர்வதேசப் புகழ் பெற்றது. அங்கு வரும் அயல்நாட்டவர், வெளிமாநிலத்தாருக்கு ஏற்ற குடி வசதி சென்னையில் போதுமானதாக இல்லை என்ற புகாரும், அதனால் தங்களது வளாகத்திற்கு உள்ளேயே ஒரு மது விடுதியைத் திறக்க அனுமதி கோரப்பட்டதாகவும் நான் கேள்விப் பட்டிருக்கிறேன். அதற்கு திமுக அரசில் பலர் பதறிப்போய் இது சாத்தியமே இல்லை என்று சொல்லிவிட்டதாகவும் அறிந்தேன்.

தவெக ஆட்சியில் அதற்கு ஒரு தீர்வு கிடைக்கலாம். பொதுமக்கள் எல்லாம் அப்பாவித்தனமாகப் போராடி, அதைப் பயன்படுத்தி இந்த ஆட்சியில் பெரும் குடிப்புரட்சி நடக்க வாய்ப்பிருக்கிறது.

ஏனெனில் 'விஜய்ண்ணா' சொன்னா சரியாத்தானே இருக்கும்!

அமுதன் ஆர்.பி.
ஆவணப்பட இயக்குனர்
சென்னை

18 மே 2026

பெண்ணுரிமையும் கலைஞரும்!

 2006 - 2011 காலத்தில் கலைஞர் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலத்தில் மதுரையில் பெண்கள் தின விழா நடந்தது. அப்போது தமிழ்நாடு சமூகநல வாரியத்தின் தலைவராக இருந்த கவிஞர் சல்மா சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக வந்திருந்து அந்த நிகழ்வில் பேசும் போது, பெண்கள் உரிமை என்று பேசும் போது கலைஞரின் பங்களிப்பைப் பேசாமல் இருக்கமுடியாது என்றார்.

ஏற்கனவே 1989ல் பெண்களுக்கு பூர்வீகச் சொத்தில் சமஉரிமை வழங்கும் சட்டத்தை கலைஞர் கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல 1989ல் அரசுப் பணியில் பெண்களுக்குக் கலைஞர் தான் 30 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தார்.

1989ல் கலைஞர், பெண்களுக்கான் சுய உதவிக்குழுக்களை அரசு உதவியிடன் தொடங்கினார்.

அதற்கு முன்பு 1973ல் இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழ்நாட்டில் தான் கலைஞர் ஆட்சியில் பெண்கள் காவல் படை உருவாக்கப்பட்டது.

ஆனால் அந்தக்கூட்டத்தில் வந்திருந்த எழுத்தாளர் வ கீதா உள்ளிட்ட பெண்ணியவாதிகள் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தது எனக்கு இன்னும் நினைவிலிருக்கிறது. கலைஞரைப் பற்றி கட்டாயம் பேசவேண்டும் என்ற சட்டம் இருக்கிறதா என்று சிலர் முணுமுணுத்தனர்.

இப்படி எல்லாத் தரப்பிலும் கலைஞருக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் மறுக்கப்பட்டே வந்திருக்கிறது.

சனாதனத்தின் வழியில் சூத்திரர்களுக்கு புகழ் கிடையாது. தண்டனை மட்டும் தான். அதுவும் மிகையான தண்டனை மட்டும் தான்.

நாம் என்றுமே தண்டனைக்கு உரியவர்கள். நமக்குப் புகழும் பெருமையும் வந்தால் அது பிழையாவோ, ஊழலாகவோ, அவமானமாகவோ, வெற்று முழக்கமாகவோ, அதிகப் பிரசங்கித் தனமாகவோ தான் கருதப்படும்!

சமீபத்தில் மு.க.ஸ்டாலினுக்கும் அதே நிலை தான். தாம் செய்த வேலைகளை எடுத்துச் சொன்னால் அது விளம்பர ஆட்சி என்றார்கள். திமிர், ஆட்டம் என்றும் வசை பாடினார்கள்.

தமது ஆட்சியில் மு.க.ஸ்டாலின் பெரிய விருந்தே வைத்து விட்டார். தொழில் வளர்ச்சியிலிருந்து, சமூகநலம் வரை அவரது சாதனைகளைச் சொல்லி முடியாது.

எதிரிகளை விட்டுவிடுங்கள். அவர்களுக்குத் திமுகவைக் கண்டாலே ஆகாது.

ஆனால் சிவில் சமூகத்தினருக்கு திமுகவின் மீது எப்போதும் குறை இருப்பது இந்த சனாதனத்தின் வெளிப்பாடு தான்.

படித்த இளைஞர்கள் ஏன் தவெகவின் பொய்களை நம்பினார்கள்? அவர்களிடம் இருக்கும் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு ஏன் உண்மைகளைக் கண்டறியவில்லை? அவர்களுக்கு அந்தப் பொறுப்பில்லையா?

அவர்களைப் படிக்கவைத்து ஆளாக்கியது, அவர்களை வளர்த்துக் கொள்ள மட்டும் தானா? தமிழ்நாட்டின் வரலாற்றை அவர்கள் ஏன் படிக்கவில்லை?

இப்படி ஆயிரம் கேள்விகள் எழுகின்றன! நம்மிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மை தான் இதற்குக் காரணம்.

நமக்கு ஒரு நன்மை நடந்தால் அதைக் கொண்டாடும் அறிவும் இல்லை, துணிச்சலும் இல்லை. எப்போதும் 'மேன்மக்களின்' ஒப்புதலுக்காக ஏங்குகிறோம். 'அவர்கள்' ஏற்றுக்கொண்டால் அது சரி, அவர்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் என் தலையையும் நான் வெட்டிக்கொடுத்து என் விசுவாசத்தை வெளிப்படுத்துவேன் என்கிற அடிமை குணம் தான் காரணம்.

அமுதன் ஆர்.பி.
ஆவணப்பட இயக்குனர்
சென்னை

18 மே 2026

தேர்தலுக்குப் பின் 03

 தவெக அரசு திமுகவிலிருந்து மாறுபட்டு இயங்காது. அதன் நோக்கமே திமுகவை விட நாங்கள் தான் கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள் என்று திமுகவின் தோழமைக் கட்சிகளை நம்ப வைத்து அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவதே. ஏற்கனவே காங்கிரஸ் முழுமையாகப் போயாச்சு. இனி விசிகவும் இடதுசாரிகளும் தான்.

மோடி அரசின் ஒத்துழைப்புடன் சில அதிரடி முடிவுகளை தவெக அரசு எடுத்தால் போதும் எல்லோரும் சாய்ந்து விடுவார்கள். இதற்காக பாஜக எதையும் செய்யும்.
திமுகவின் தனித்த அரசியலை நீர்த்துப்போகச் செய்து விட்டால் தமிழ்நாட்டின் தனித்துவத்தை அழித்துவிடலாம் என்று எதிரிகள் நினைக்கக் கூடும்.
அப்படி நடந்தாலும் போலிகளின் சாயம் வெளுக்கும் வரை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்களைப் போல் ஆதரவாளர்களாகிய நாம் பொறுமை காக்க வேண்டும்.

18 மே 2026

மகிழ்ச்சியாக வாழத்தெரியாத தமிழர்கள்!

 மகிழ்ச்சியாக வாழத்தெரியாத தமிழர்கள்!

இசைஞானி தன் வாழ்க்கையையே இசைக்கு அர்ப்பணித்து, ஆயிரக்கணக்கான பாடல்களின் மூலம் தமிழர்களுக்கு மகிழ்ச்சியை, ஆறுதலை, உற்சாகத்தை, தாக்கத்தைக் கொடுத்தவர்.

ஆனால் தமிழர்கள் அவருக்கு என்ன கைமாறு செய்தார்கள்?

அவர் திமிர் பிடித்தவர் என்றார்கள். சாமி கும்பிடுகிறார் என்றார்கள். நன்றி மறந்தவர் என்றார்கள். கோபக்காரர் என்றார்கள். யாருக்கும் உதவி செய்யமாட்டார் என்றார்கள்.

இவை எதற்கும் ஆதாரம் இல்லை என்றாலும், நமது வேலை இசைஞானியை ரசிப்பதா? அல்லது அவரது நடத்தையை சீர்தூக்கிப் பார்ப்பதா?

தமிழ்நாட்டில் பெரியார், கலைஞர் ஆகியோருக்கு அடுத்த அதிகம் வசவுகளுக்கு ஆளானவர் இசைஞானி அவர்கள்.

சென்னை ஐஐடியில் இப்போது அவரது இசைக்குறிப்புகளை வாங்கி ஆராய்ச்சி செய்யப்போகிறார்கள். நாம் எல்லோரும் வெளியே நின்று வேடிக்கை பார்க்கவேண்டியது தான்.

வடிவேலுவின் நகைச்சுவை நம் எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் அவரைப் பற்றி நாம் என்ன சொல்கிறோம்? அவருக்கு வாய் ஜாஸ்தி என்கிறோம். அவருக்கு இது தேவையா என்கிறோம். விஜயகாந்தை அவர் எதிர்த்ததால் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவரை வசை பாடுகிறோம். குறிப்பாகத் திமுகவை ஆதரித்ததால் இன்னும் திட்டுகிறோம்.

தமிழர்களுக்கு என்ன தான் பிரச்சனை?

நமக்கு நன்மை செய்வோரை ஏன் தூக்கி எறிகிறோம்?

நவீனத் தமிழ்நாட்டைக் கட்டிய கலைஞரைப் பற்றி எத்தனை அவதூறுகள்! பிம்ப வழிபாட்டை தமது அரசியலாகக் கொண்ட எம்ஜிஆர், ஜெயா மீது எத்தனை பற்று!

சோறு போட்ட விஜய்காந்த் தேர்ந்தெடுத்த அரசியல்வாதி!

பின் குறிப்பு :

இப்போது நடிகர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை எல்லோரும் கடந்து போகின்றனர். அது யாருக்கும் பிரச்சனையாக இல்லை. அவரால் திமுகவைத் தோற்கடிக்க முடியுமென்றால் அவர் என்ன செய்தாலும் சரி என்கிறோம்.

18 மே 2006

திமுகவும் அதிமுகவும் இணைந்தால் என்ன?

திமுகவும் அதிமுகவும் இணைந்தால் என்ன?

வெறும் பொய் சொல்லி, வதந்திகளைப் பரப்பி, ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்று, குழந்தைகளைக் கொண்டு மூத்தவர்களை மிரட்டி, ரசிக மனநிலையை, நடிகரின் வசீகரத்தை, பாஜகவின் தந்திரத்தைக் கொண்டு தவெக வெற்றி பெறும் போது அதை முறியடிக்க இரண்டு பெரும் கட்சிகளும் ஏன் சேரக்கூடாது?

இரண்டு கட்சிகளுக்கும் போதுமான எண்ணிக்கையிருந்தால் எதுவும் நடக்கலாம். இரண்டு கட்சிகளும் தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் இல்லையே? அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தானே?
எழுபதுகளில் முதல்வர் கலைஞரின் செயல்பாடுகளின் தாக்கம் தாங்கமுடியாமல், அதைத் தடுக்க எம்ஜிஆருக்கு அழுத்தங்கள் கொடுத்துத் தான் திமுகவை உடைத்து, அதிமுகவை உருவாக்கினார்கள்.
திமுக போல வேடம் போட்ட, கொஞ்சம் வீரியம் குறைவான அதிமுக மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, திராவிட அரசியலை வளர்க்க விரும்பாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட். பார்ப்பனர்கள், இந்திய அரசு ஆகியோரால் தானே உருவாக்கப்பட்டது?
புறக்காரணிகள் தானே பிளவை உண்டாக்கியது. இப்போது அதே புறக்காரணி இருக்கும் போது ஏன் அதைத் தீர்க்கக்கூடாது?
அறமற்ற வகையில் உருவாக்கப்பட்ட கட்சி, இப்போது நமது மாநிலத்தின் உரிமைகளைக் காக்க திமுகவுடன் இணைந்தால் என்ன?
ஐம்பது ஆண்டுகள் இந்த மாநிலத்தைச் செதுக்கிய கட்சிகள் ஏன் இணையக்கூடாது? முட்டை போட்ட கோழிக்குத் தான் தெரியும் அதன் அருமை.
திமுக நடத்துவது அரசியல் கட்சி. நடப்பு அரசியலில் எது சாத்தியமோ அதை முயற்சித்துப் பார்ப்பதில் என்ன தவறு?
அதை விடுங்கள். இப்படிப்பட்ட செய்தி தற்போது ஏன் பரப்பப்படுகிறது?
அதிமுகவை விஜய் உடைத்ததை நியாயப்படுத்தவா?

18 மே, 2026

தேர்தலுக்குப் பின் 02

 நாற்பது வயது கடந்தவர் தான் பதறிக்கொண்டிருக்கிறோம். இப்படி கஷ்டப்பட்டு உருவாக்கிய நாடு நாசமாய்ப் போகிறதே என்று!

இளைஞர்களோ மூத்தோர் உருவாக்கிய வளர்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள்!
திராவிடத்தின் எதிரிகள் எப்போது இந்த ஆட்டம் அடங்கும் என்று வேடிக்கை பார்க்கின்றனர். தமது வாய்ப்பை நோக்கி!

மே 18, 2026

விஜய்க்கு வாக்களித்தவர்கள் யார்?

விஜய்க்கு வாக்களித்தவர்கள் :

1) அவரது தீவிர ரசிகர்கள்
2) பெண்கள்
3) இளைஞர்கள் (படித்தவர், படிக்காதவர், தோல்வி அடைந்தவர், மிதமான வெற்றி பெற்றவர், பெரிய வெற்றிகளை எதிர்நோக்குபவர்) மற்றும் அவர்களால் உந்தப்பட்ட பெற்றோர்கள்
4) நாதகவினர்
5) பட்டியலின மக்கள்
6) அதிமுகவினர்
7) பாஜகவினர்
😎 கிறிஸ்தவர்கள்
9) காங்கிரஸ்காரர்கள்
10) கடைசி நேர முடிவெடுப்போர்
இவர்களைத் திமுக எப்படித் தடுத்திருக்க முடியும்?
விஜய் கட்சியினர் நடத்திய ஆக்ரோஷமான, மிகையான பரப்புரைக்கு மேற்குறிப்பிட்டோர் ஈடுகொடுத்துவிட்டனர்.
ஜெயா இருந்திருந்தால் திமுக வெறுப்பாளர்கள் (கணிசமான வாக்காளர்கள்) அதிமுகவை ஆதரித்து வெற்றிபெற வைத்திருப்பார்கள்.
திமுக ஒரு நெருப்பு. இந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி, பெண்கள் முன்னேற்றம், கல்விக்கு முக்கியத்துவம், தொழில் வளர்ச்சி, அந்நிய முதலீடு, கட்டமைப்புத் திட்டங்கள் ஆகியவை எல்லோரையும் திகட்ட வைத்தன. இந்த வேகத்தை, தீவிரத்தைத் தமிழர்களால் கையாளவில்லை. தாவி ஓடிவிட்டனர்.
திருப்புறங்குன்றத்தில் திமுக காட்டிய உறுதி பக்தகோடிகளை மிரட்டியிருக்கும்.
அதற்காக சங்கி அரசியலை ஏற்றுக்கொள்ளமுடியுமா?
திமுக நல்லாட்சியைத் தான் கொடுத்தது. அதுவே எதிரிகளை ஒன்றிணைத்து விட்டது.
அதற்கு விஜய் ஒரு ஆயுதமானார்.
மற்றபடி அடுத்த தேர்தலுக்குள் திமுக தாமாகவே தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும். புதிய ரத்தம் பாய்ச்சப்படும்.
காங்கிரஸ் கழன்று விட்டது, உதயநிதி எதிர்கட்சித் தலைவர். அவரும் அடித்து ஆடுகிறார். இதை விட என்ன வேண்டும்?
உற்சாகமாக இருப்போம். கொள்கை உறுதியோடு !
குறிப்பு : திமுக வெறுப்பாளர்கள் விடை பெறலாம். நீங்கள் சொல்வதற்கு ஏதுமில்லை.

மே 17; 2026

திமுகவின் அறிவுச்சூழல்!

  திமுக ஆட்சி காலத்தில் அரசு சார்பாக நடத்தப்பட்ட இலக்கியத் திருவிழாக்களில் இடதுசாரிகள், அம்பேத்கரியவாதிகள், தமிழ்த்தேசியவாதிகள், பெண்ணியவாதி...