திமுக ஆட்சி காலத்தில் அரசு சார்பாக நடத்தப்பட்ட இலக்கியத் திருவிழாக்களில் இடதுசாரிகள், அம்பேத்கரியவாதிகள், தமிழ்த்தேசியவாதிகள், பெண்ணியவாதிகள், சூழலியவாதிகள், பாலியல் சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் கருத்துரை ஆற்ற அழைக்கப்பட்டனர்.
பெரும்பாலும் யாரை எங்கு அழைப்பது என்கிற இந்த முடிவுகளை அதிகாரிகள் தான் எடுத்தனர் என்றாலும் திமுக ஆட்சியில் தான் இது நடந்தது என்பதையும் அதற்கு திமுக ஆட்சி ஏற்படுத்திய சூழலும் (DMK Eco System) தான் காரணம் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம், சர்வதேசப் புத்தக கண்காட்சி ஆகியவை எல்லாம் திமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டவை.
திமுகவுடன் கூட்டணியில் இருந்தவர்கள் தயவில் தற்போதைய ஆட்சி நடந்தாலும், இந்த விழாக்கள் நடக்குமா? அப்படியே நடந்தாலும் அவற்றின் அரசியல் மற்றும் கலைத்தன்மை எப்படி இருக்கும்?
கடந்த அறுபது ஆண்டுகளாக திமுகவின் அறிவுச்சூழல் தான் இங்கு நிலவியது.
இனிமேல் அது என்னவாகும்?