Tuesday, March 22, 2016

அடிப்படைவாதத்திற்கு எதிரான பெண்ணுரிமைக் கலைவிழா

அடிப்படைவாதத்திற்கு எதிரான பெண்ணுரிமைக் கலைவிழா

26 மார்ச், ஸ்பேசஸ், பெசன்ட் நக்ர், சென்னை
அமைப்பு: அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், சென்னை



திரையிடல் : காலை 11 மணி முதல் 1 மணி வரை
கீதா இளங்கோவன், நிஷா பொன் தாத்தில், ப்ரசன்னா ராமஸ்வாமி, ஸ்ரீபாலா கே.மேனன் இயக்கிய ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள்



ஓவியக்கண்காட்சி: காலை 11 மணி முதல்
வியர் வீர சந்தானம்
ஓவியர் .விஸ்வம்
ஓவியர் தட்சணாமூர்த்தி
ஓவியர் ஜே.கே.
ஓவியர் மனோகரன்
ஓவியர் நெடுஞ்செழியன்
ஒவியர் .நாகராஜன்
ஓவியர் பெனிடா பெர்சியால்
ஓவியர் ராஜன்


பிற்பகல் 12 மணி : மக்கள் மன்றம் கலைக்குழுவின் பறையிசை

உழைக்கும் பெண்கள் தினவிழா பற்றிய கண்காட்சி
ஒருங்கிணைப்பு : தோழர் ஜீவசுந்தரி பாலன் மற்றும் கெளஷிக்

பெண் புகைப்படக்கலைஞர்களின் புகைப்படக்கண்காட்சி
ஒருங்கிணைப்பு: கிருஷ்ணப்பிரியா



பிற்பகல் 2 மணி :
கவிதை, கதை, கட்டுரை வாசிப்பு :
இயக்குநர் ப்ரசன்னா ராமஸ்வாமி
திரைக்கலைஞர் ரோகிணி
கவிஞர் சந்திரா தங்கராஜ்
பத்திரிக்கையாளர் ஜெயராணி, 
பத்திரிக்கையாளர் கவின் மலர்
களப்பணியாளர் கவிதா சொர்ணவல்லி
கவிஞர் கிருஷாங்கிணி
களப்பணியாளர் பாரதி செல்வா
களப்பணியாளர் ஜீவலட்சுமி
களப்பணியாளர் ஹேமாவதி ஹேம்ஸ்
எழுத்தாளர் தமயந்தி நிழல்
கவிஞர் குட்டி ரேவதி
பத்திரிக்கையாளர் கவிதா முரளிதரன்
கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்
கவிஞர் ஈழவாணி
பேரா மு நஜ்மா
பேரா இரெ மிதிலா
கவிஞர் கீதாஞ்சலி ப்ரியதர்ஷினி
களப்பணியாளர் அர்ச்சனா
நாடகக்கலைஞர் லிவிங் ஸ்மைல் வித்யா
கவிஞர் யாழன் ஆதி
கவிஞர் அகரமுதல்வன்
கவிஞர் கார்த்திக் புகழேந்தி
களப்பணியாளர் ரகுநாத் ரத்னம்
களப்பணியாளர் கலை மணிமுடி
நாடக்கலைஞர் ஸ்ரீஜித்
இயக்குநர் ரஃபீக்
களப்பணியாளர் கிருபா லில்லி எலிசபெத்
கவிஞர் அய்யப்ப மாதவன்
எழுத்தாளர் அஜயன் பாலா
களப்பணியாளர் ஜீவகிரிதரன்
எழுத்தாளர் விஜயபாஸ்கர் விஜய்
எழுத்தாளர் ஜீவசுந்தரிபாலன்
களப்பணியாளர் பிரின்சு என்னாரெசு பெரியார்

பாடல்:
களப்பணியாளர் சந்தனமேரி



மாலை 4 மணி
கலந்துரையாடல் : சாதிய, மதவாத அடிப்படைவாதத்திற்கு எதிராக பெண்கள்
பேரா சரசுவதிஒருங்கிணைப்பு

ஆய்வாளர் வ.கீதா
பேரா எஸ்.ஆனந்தி, 
களப்பணியாளர் கீதா, மக்கள் மன்றம்
வழக்குரைஞர் அஜிதா
தொல்லியல் ஆய்வாளர் பத்மாவதி
களப்பணியாளர் டாக்டர் ஐஸ்வர்யா
ஆய்வாளர் கீதா நாராயண்
களப்பணியாளர் வனேசா பீட்டர்
பேரா ராணி செந்தாமரை, 
பேரா ஜெயசாந்தி
எழுத்தாளர் ஓவியா
வழக்குரைஞர் அங்கயற்கண்ணி
பேரா மார்க்ஸ்
தோழர் விடுதலை ராஜேந்திரன்
பேரா வீ.அரசு
கோம்பை எஸ்.அன்வர்



மாலை 6 மணி
நாடகம்:
பரீக்‌ஷா வழங்கும் எழுத்தாளர் திலீப்குமாரின் “ரமாவும் உமாவும்” – இயக்கம் ஞாநி
கலைமயம் வழங்கும் “வருகலாமோ” – இயக்கம் : கலைராணி
நீலம் குழுவினரின் “நிர்வாணம்:

ஒருங்கிணைப்பு :
பதிப்பாளர் பரிசல் சிவ செந்தில்நாதன்
ஆவணப்பட இயக்குநர் அமுதன் ஆர்.பி.


தொடர்புக்கு : 9940642044; 8695279353; 9382853646

Wednesday, March 16, 2016

தமிழ் சமூகத்தின் ஆகப் பெரிய வீழ்ச்சியின் அடையாளம் சங்கரின் கொலை!

உடுமலைப் பேட்டையில் கொல்லப்பட்ட தலித் இளைஞர் சங்கருக்கு ஆதரவாகவும், அவரது மனைவி கெளசல்யாவுக்கு ஆதரவாகவும் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் ஆணவக் கொலைக்கு எதிராகவும் அனைத்து கட்சித் தலைவர்களும் முன் வர வேண்டும்.
தமிழ் சமூகத்தின் ஆகப் பெரிய வீழ்ச்சியின் அடையாளம் சங்கரின் கொலை.
ஒரு தலித் இளைஞர், ஒரு இடைச்சாதி பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்ததற்காக, பட்டப் பகலில் ஒரு பேருந்து நிலையத்தில் பலர் முன்பு மூன்று பேர் கொண்ட சாதி வெறிக் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்.
இதில் புலப்படுவது இரண்டு ஆபத்தான மனநிலைகள்:.
1) தலித் ஆண் உடனான காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
2) இதற்காக கொலையும் செய்வோம். எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.
இதை நாம் எல்லோரும் கூட்டாகக் கண்டிக்க வேண்டும்.
உண்மையில் உங்களுக்கு தமிழர்கள் மீது அக்கறை இருந்தால், மனித மாண்பு மீது நம்பிக்கை இருந்தால் இதை நீங்கள் கண்டிக்க வேண்டும்.
இதை விட தேர்தல் வெற்றி முக்கியமில்லை.
இதை விட எதுவும் முக்கியமில்லை.

இன்று நான் மிகவும் வெட்கப்படுகிறேன்!

பிற்படுத்தப்பட்ட சாதியில் பிறந்தவன் என்கிற முறையில்
ஒரு ஆண் என்கிற முறையில்
ஒரு தமிழன் என்கிற முறையில்
இன்று நான் மிகவும் வெட்கப்படுகிறேன்.
ரத்தம் கொதிக்கிறது.
இப்படி பட்டப்பகலில் ஒரு பேருந்து நிலையத்தில் எல்லோர் முன்பும் காதல் திருமணம் செய்து கொண்ட ஒரு இளம் இணையரை மூன்று பேர் கொண்ட கும்பல் வெட்டிச் சாய்த்தனரே.
ஒரு தலித் ஆண் தலித் அல்லாத ஒரு பெண்ணைக் காதலிக்கக்கூடாதா? திருமணம் செய்து கொள்ளக் கூடாதா?
ஏன் இப்படி நடக்கிறது?
ஏன் இவ்வளவு வன்மம்?
பார்ப்பனர்களை எதிர்த்துப் போராடினோமே தமிழர்களே!
இப்படி நம்முள் இருக்கும் சாதி வெறியை எதிர்த்து எப்போது போராடப் போகிறோம்?
நம் மீது இழைக்கப்படும் வன்முறையை எதிர்க்கிற போது நாம் இழைக்கும் வன்முறையை எப்போது எதிர்க்கப் போகிறோம்?
தலித் மக்களுக்கு ஆதரவாக நிற்பதே சரியான அரசியல்.
அவர்களோடு இணைந்து போராடுவதே நீதியான அரசியல்.
காதல் திருமணங்களை ஆதரிப்போம்.
குறிப்பாக தலித் - தலித் அல்லாதோர் திருமணங்களை ஆதரிப்போம்.
சாதி வெறிக்கு எதிராகப் போராடுவோம்.
தன் சாதி உயர்ந்தது என்று நினைக்கிறவன் காட்டுமிராண்டி, பிற்போக்குவாதி, அறிவு வளர்ச்சி குன்றியவன்.
அத்தகைய மனிதர்களை அறிவால், அரசியலால் முறியடிப்போம்.
அவர்களையும் சாதியப் பிடியிலிருந்து விடுவிப்போம்.

உண்மையில் இடைச்சாதி ஆண் தம் பெண்களைப் பார்த்து அச்சப்படுகிறான்.

ஆணவக் கொலைகள் பெண்களுக்கு எதிரான வன்முறையும் கூட.
இது சாதி ஆதிக்கம் மட்டும் அல்ல. ஆண் ஆதிக்கமும் கூட.
இடைச்சாதிப் பெண் தன் துணையைத் தாமே தேடக் கூடாது என்று அவளது உடலை, உணர்வை, தேர்வை அவளது வீட்டு ஆண்கள் (தகப்பன், தாத்தா, சகோதரன், மாமா, சித்தப்பா) கட்டுப்படுத்தும் செயல்.
இடைச்சாதி ஆண்கள் தலித் பெண்களைக் காதலித்தாலோ, திருமணம் செய்தாலோ இதே வன்முறை நிகழ்வதில்லை.
இடைச்சாதிப் பெண்கள் தலித் ஆண்களைக் காதலித்தால், திருமணம் செய்து கொண்டால் தான் இந்த வன்முறை.
உண்மையில் இடைச்சாதி ஆண் தம் பெண்களைப் பார்த்து அச்சப்படுகிறான்.
அவளது வளர்ச்சி, அறிவு, உடல் கண்டு அஞ்சுகிறான்.
அவளைக் கட்டுப்படுத்த முனைகிறான்.
ஆனால் அவள் கல்வி பெற்று, வெளியுலக அறிவு பெற்று வெளியேறுவதை அவனால் தடுக்க முடியவில்லை.
இடைச்சாதி ஆண்கள் தம் வீட்டு பெண்களுக்கு ஏற்றார் போல வளரவில்லை.
வெட்டி வீராப்பு பேசிக்கொண்டு திரிகின்றனர். முரட்டுத் தனாமாக எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கின்றனர்.
நாங்க மாட்டுக்கறி சாப்பிடுவோம். எங்களுக்கு நல்லா எந்திரிக்கும். அதனால தான் எங்க மேல எல்லாப் பொம்பளைகளுக்கு ஒரு ஈர்ப்பு என்று ஒரு தலித் ஆண் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது.
நாங்க கஷ்டம் தெரிஞ்சவிங்க, உழைக்கிற வர்க்கம். மரியாதையா நடந்துக்குவோம். அதனால எல்லாருக்கும் எங்களைப் பிடிக்கும் என்றார் இன்னொருவர்.
எங்களுக்கு ஒரு வாழ்க்கையில ஒரு நோக்கம், லட்சியமிருக்கு. தன் முனைப்பு இருக்கு. அதனால எங்க மேல அந்த பெண்களுக்கு ஈர்ப்பு வருது என்றார் இன்னொருவர்.
உண்மையில் இது ஒரே சாதி ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடக்கிற போட்டி.
இடைச்சாதி ஆண்கள் தம்மை, தம் அறிவை, அனுபவத்தை, வசீகரத்தை இன்னும் வளர்த்துக்கொள்ளவேண்டும்.
அரிவாளை வைத்து சமன் செய்ய முடியாது.