மகிழ்ச்சியாக வாழத்தெரியாத தமிழர்கள்!
இசைஞானி தன் வாழ்க்கையையே இசைக்கு அர்ப்பணித்து, ஆயிரக்கணக்கான பாடல்களின் மூலம் தமிழர்களுக்கு மகிழ்ச்சியை, ஆறுதலை, உற்சாகத்தை, தாக்கத்தைக் கொடுத்தவர்.ஆனால் தமிழர்கள் அவருக்கு என்ன கைமாறு செய்தார்கள்?
அவர் திமிர் பிடித்தவர் என்றார்கள். சாமி கும்பிடுகிறார் என்றார்கள். நன்றி மறந்தவர் என்றார்கள். கோபக்காரர் என்றார்கள். யாருக்கும் உதவி செய்யமாட்டார் என்றார்கள்.
இவை எதற்கும் ஆதாரம் இல்லை என்றாலும், நமது வேலை இசைஞானியை ரசிப்பதா? அல்லது அவரது நடத்தையை சீர்தூக்கிப் பார்ப்பதா?
தமிழ்நாட்டில் பெரியார், கலைஞர் ஆகியோருக்கு அடுத்த அதிகம் வசவுகளுக்கு ஆளானவர் இசைஞானி அவர்கள்.
சென்னை ஐஐடியில் இப்போது அவரது இசைக்குறிப்புகளை வாங்கி ஆராய்ச்சி செய்யப்போகிறார்கள். நாம் எல்லோரும் வெளியே நின்று வேடிக்கை பார்க்கவேண்டியது தான்.
வடிவேலுவின் நகைச்சுவை நம் எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் அவரைப் பற்றி நாம் என்ன சொல்கிறோம்? அவருக்கு வாய் ஜாஸ்தி என்கிறோம். அவருக்கு இது தேவையா என்கிறோம். விஜயகாந்தை அவர் எதிர்த்ததால் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவரை வசை பாடுகிறோம். குறிப்பாகத் திமுகவை ஆதரித்ததால் இன்னும் திட்டுகிறோம்.
தமிழர்களுக்கு என்ன தான் பிரச்சனை?
நமக்கு நன்மை செய்வோரை ஏன் தூக்கி எறிகிறோம்?
நவீனத் தமிழ்நாட்டைக் கட்டிய கலைஞரைப் பற்றி எத்தனை அவதூறுகள்! பிம்ப வழிபாட்டை தமது அரசியலாகக் கொண்ட எம்ஜிஆர், ஜெயா மீது எத்தனை பற்று!
சோறு போட்ட விஜய்காந்த் தேர்ந்தெடுத்த அரசியல்வாதி!
பின் குறிப்பு :
இப்போது நடிகர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை எல்லோரும் கடந்து போகின்றனர். அது யாருக்கும் பிரச்சனையாக இல்லை. அவரால் திமுகவைத் தோற்கடிக்க முடியுமென்றால் அவர் என்ன செய்தாலும் சரி என்கிறோம்.
18 மே 2006
No comments:
Post a Comment