Friday, February 21, 2020

ஆவணப்பட விழாக்களும் நானும்!


ஒவ்வொரு ஆவணப்பட விழாவின் போதும் குறிப்பாக பாதி நிகழ்வு கடந்த பிறகு 'நடக்கிற வேலை எல்லாம் சரியா? இதனால் என்ன பயன்? யார் பார்வையாளர்கள்? அடுத்த முறை இதைச் செய்யலாமா?' என்கிற சந்தேகங்கள் வருவதும் அது கடும் மனச்சோர்வை, கழிவிரக்கத்தை ஏற்படுத்துவதும் தொடர்ந்து நடப்பவை.

ஏன் சென்னை நண்பர்கள் அதிகம் வருவதில்லை? அவர்களை எப்படி வரவைப்பது? ஏன் வெளியூர் நண்பர்கள் வருவதில்லை? முறையான விளம்பரம் செய்யவில்லையா? அல்லது நாம் செய்கிற வேலை / ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சி நிரல் எழுத்தாளர்களை, படைப்பாளிகளை, இயக்குனர்களை கவரும் தரத்தில் இல்லையா? அல்லது எனது அணுகுமுறையில் ஏதும் தவறா?

இந்த முறை சென்னை ஆவணப்பட மற்றும் குறும்படவிழாவில்  பத்து இயக்குனர்கள் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொருவரும் தம்மளவில் பெரும் சாதனைகள் புரிந்தவர்கள். நிறைய படங்களை இயக்கியவர்கள், திரைப்பட விழாக்களில் பங்கேற்றவர்கள். விருதுகள் வாங்கியவர்கள், பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள பெரும் அனுபவங்களை, கதைகளைக் கொண்டவர்கள்.

அதே போல மிகுந்த பரந்து பட்ட வகைகளைச் சேர்ந்த படங்களைத் திரையிடுகிறோம். குறிப்பாக பன்னாட்டு படங்கள் தான் அதிகம்.

ஆனாலும் ஏன் பார்வையாளர்கள் மிகவும் குறைவாக வருகின்றனர்? இவ்வளவு பேர் தான் வருவார்களா? இது தான் சாத்தியமாகும் எண்ணிக்கையா? ஆவணப்படவிழாவிற்கென்று கூட்டம் வராதா?

அதிகபட்சம் 50 பேர் வருவதே கடினமாக இருக்கிறது.

நிறைய இயக்குனர்கள் பார்வையாளர்கள் குறைவாக வந்தாலும் இந்த முயற்சியை மதிக்க வேண்டும் என்பதற்காக பெருந்தன்மையாக கூட்டம் குறைவாக இருப்பதைப் பொருட்படுத்தாது சிரித்த முகத்துடன் நகர்ந்து விடுகின்றனர்.

ஒரு திரைப்படவிழாவிற்குக் கிடைக்கும் சிறந்த வரவேற்பு எது? பார்வையாளர் எண்ணிக்கையா? விரிவான கலந்துரையாடலா? அல்லது இரண்டுமா?




No comments:

Post a Comment