படிப்பு இல்லாதவன் செய்யும் வேலை!
தமிழ்நாட்டில் சூத்திரர்கள், பார்ப்பனர்களுடன் சமரசம் செய்து கொண்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. ஜெயா காலில் எல்லா சூத்திரர்களும் விழுந்து எழுந்து தமது விசுவாசத்தைக் காட்டியதை மறக்கலாமா? தமது குலதெய்வத்தை விட பெருஞ்சாமிகளுடன் தான் தினசரி டச்சில் இருக்கின்றனர். போதாதற்கு இப்போது சீரடி சாய்பாபா போன்ற டீசண்ட் சாமிகள் வேறு. குறையேதுமில்லை.
தமது வீரத்தை / பெருமையை / சுயமரியாதையை தலித்துகளின் மீது வன்கொடுமையாக வெளிப்படுத்துவதே போதும் இந்த "ஆதிக்க சாதியினருக்கு". நீட் மட்டுமல்ல, எந்தப்படிப்பும் இவர்களுக்குத் தேவையில்லை. அதெல்லாம் எதுவும் இல்லாதவன் செய்கிற வேலை. இவர்களுக்குத் தான் கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்து, கள்ளச்சாராயம், கஞ்சா, அடிதடி, போலீஸ், வக்கீல், சினிமா என பல துறைகள் இருக்கின்றனவே! நிலம் இருக்கு, விவசாயம் பண்ணுவோம், கம்பெனி ஆரம்பிப்போம், மொதலாளி வம்சம் அல்லவா! நீட்டைப் பற்றி எதுக்கு இப்போது வெட்டிப் பேச்சு!
ஒருவகையில் நீட்டினால் தலித்துகளுக்கும் சீட்டு கிடைக்கவில்லை என்பது சூத்திரர்களுக்கு ஒரு ஆறுதல் தானே! (தாம் படிக்கவில்லை என்பது முக்கியமில்லை, தலித்துகளும் படிக்ககூடாது). பஜ்ரங் தள், விநாயக சதுர்த்தி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாஜக என பல ப்ளாட்பாரம்கள் இருக்கின்றன, தேசிய உணர்வை வெளிப்படுத்த! இது போதாதா? மோடி வாழ்க! பாரத் மாதா கீ ஜெய்!
Subscribe to:
Post Comments (Atom)
விஜய் ரசிகர்கள் யார்?
விஜய் ரசிகர்கள் யார்? - அமுதன் ஆர்.பி. (ஆவணப்பட இயக்குனர்) சமீபத்தில் ஒரு பேராசிரியர் என்னிடம் 'கரூர் சம்பவம்' பற்றி என்ன நினைக்கிறீ...
-
விட்ட குறை தொட்ட குறை – அமுதன் ஆர்.பி. ஒரு பள்ளி மாணவனின் விடுதி காதல் அனுபவங்கள் நான் உயர்நிலைப்பள்ளிப் படிப்பு படித்தது ஒரு க...
-
"18 ஆண்டுகள் தொடர்ச்சியாக சர்வதேச ஆவண மற்றும் குறும்பட விழா நடத்தி வருவதே ஒரு சாதனைதான்" - ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன் பேட்டி ...
-
விஜய் ரசிகர்கள் யார்? - அமுதன் ஆர்.பி. (ஆவணப்பட இயக்குனர்) சமீபத்தில் ஒரு பேராசிரியர் என்னிடம் 'கரூர் சம்பவம்' பற்றி என்ன நினைக்கிறீ...
No comments:
Post a Comment