Wednesday, March 16, 2016

தமிழ் சமூகத்தின் ஆகப் பெரிய வீழ்ச்சியின் அடையாளம் சங்கரின் கொலை!

உடுமலைப் பேட்டையில் கொல்லப்பட்ட தலித் இளைஞர் சங்கருக்கு ஆதரவாகவும், அவரது மனைவி கெளசல்யாவுக்கு ஆதரவாகவும் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் ஆணவக் கொலைக்கு எதிராகவும் அனைத்து கட்சித் தலைவர்களும் முன் வர வேண்டும்.
தமிழ் சமூகத்தின் ஆகப் பெரிய வீழ்ச்சியின் அடையாளம் சங்கரின் கொலை.
ஒரு தலித் இளைஞர், ஒரு இடைச்சாதி பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்ததற்காக, பட்டப் பகலில் ஒரு பேருந்து நிலையத்தில் பலர் முன்பு மூன்று பேர் கொண்ட சாதி வெறிக் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்.
இதில் புலப்படுவது இரண்டு ஆபத்தான மனநிலைகள்:.
1) தலித் ஆண் உடனான காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
2) இதற்காக கொலையும் செய்வோம். எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.
இதை நாம் எல்லோரும் கூட்டாகக் கண்டிக்க வேண்டும்.
உண்மையில் உங்களுக்கு தமிழர்கள் மீது அக்கறை இருந்தால், மனித மாண்பு மீது நம்பிக்கை இருந்தால் இதை நீங்கள் கண்டிக்க வேண்டும்.
இதை விட தேர்தல் வெற்றி முக்கியமில்லை.
இதை விட எதுவும் முக்கியமில்லை.

No comments:

Post a Comment

பராசக்தி கூறும் உண்மை

  பராசக்தி கூறும் உண்மை   - ஆவணப்பட இயக்குனர் அமுதன் ஆர் . பி . பராசக்தி திரைப்படத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை இய...