Wednesday, March 16, 2016

இன்று நான் மிகவும் வெட்கப்படுகிறேன்!

பிற்படுத்தப்பட்ட சாதியில் பிறந்தவன் என்கிற முறையில்
ஒரு ஆண் என்கிற முறையில்
ஒரு தமிழன் என்கிற முறையில்
இன்று நான் மிகவும் வெட்கப்படுகிறேன்.
ரத்தம் கொதிக்கிறது.
இப்படி பட்டப்பகலில் ஒரு பேருந்து நிலையத்தில் எல்லோர் முன்பும் காதல் திருமணம் செய்து கொண்ட ஒரு இளம் இணையரை மூன்று பேர் கொண்ட கும்பல் வெட்டிச் சாய்த்தனரே.
ஒரு தலித் ஆண் தலித் அல்லாத ஒரு பெண்ணைக் காதலிக்கக்கூடாதா? திருமணம் செய்து கொள்ளக் கூடாதா?
ஏன் இப்படி நடக்கிறது?
ஏன் இவ்வளவு வன்மம்?
பார்ப்பனர்களை எதிர்த்துப் போராடினோமே தமிழர்களே!
இப்படி நம்முள் இருக்கும் சாதி வெறியை எதிர்த்து எப்போது போராடப் போகிறோம்?
நம் மீது இழைக்கப்படும் வன்முறையை எதிர்க்கிற போது நாம் இழைக்கும் வன்முறையை எப்போது எதிர்க்கப் போகிறோம்?
தலித் மக்களுக்கு ஆதரவாக நிற்பதே சரியான அரசியல்.
அவர்களோடு இணைந்து போராடுவதே நீதியான அரசியல்.
காதல் திருமணங்களை ஆதரிப்போம்.
குறிப்பாக தலித் - தலித் அல்லாதோர் திருமணங்களை ஆதரிப்போம்.
சாதி வெறிக்கு எதிராகப் போராடுவோம்.
தன் சாதி உயர்ந்தது என்று நினைக்கிறவன் காட்டுமிராண்டி, பிற்போக்குவாதி, அறிவு வளர்ச்சி குன்றியவன்.
அத்தகைய மனிதர்களை அறிவால், அரசியலால் முறியடிப்போம்.
அவர்களையும் சாதியப் பிடியிலிருந்து விடுவிப்போம்.

No comments:

Post a Comment