ஆண்டு நிறைவு - மகிழ்ச்சியும் பெருமையும்!
2025ம் ஆண்டு என்னளவில் சிறப்பாக முடிவுக்கு வந்திருக்கிறது.
2025ம் ஆண்டில் தான் எனது 22வது ஆவணப்படமான உழைக்கும் பெண்கள் தொடரின் முதல் பாகம் வள்ளி வெளியானது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் படப்பிடிப்பில், படத்தொகுப்பில் செலவழித்து எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படத்திற்கு ஒத்துழைத்த இந்தப்படத்தின் கதாநாயகியும் வீட்டு வேலைப் பணியாளரும் இரண்டு வளரிளம் பிள்ளைகளுக்குத் தாயும் குடும்பத்தலைவியுமான திருமதி வள்ளி, அவரது குடும்பத்தினர், படப்பிடிப்பில் எனக்குத் துணையாக நின்ற தோழர் அண்ணாத்துரை, அவரது துணைவியாரும் தொழிற்சங்கவாதியுமான தோழர் தனலட்சுமி, தோழர் சுஜாதா மோடி ஆகியோருக்கு நன்றி.
2025ம் ஆண்டு நாங்கள் நடத்தியத் திரைப்படவிழாக்கள் பின்வருமாறு :
13வது சென்னை பன்னாட்டு ஆவணப்பட மற்றும் குறும்படவிழா : 21-28 பிப்ரவரி 2025 : பல அரங்குகளில், சென்னை
பெண்கள் தினத் திரைப்படவிழா : 15 மார்ச், மூட்டா அரங்கு, மதுரை
மொழித் திரைப்படவிழா : 18,19 மார்ச், தட்சிணசித்ரா, சென்னை
நிஷ்டா ஜெயின் திரையிடல் சுற்றுப்பயணம் : 26-28 மார்ச், பல அரங்குகளில், சென்னை
பன்னாட்டு இசைத் திரைப்படவிழா : 5 ஏப்ரல், லென்ஸ் ஊடக மையம், மதுரை
25வது சமூகநீதித் திரைப்படவிழா : 12-14 ஏப்ரல், பல அரங்குகளில், சென்னை
26வது சமூகநீதித் திரைப்படவிழா : 21 ஏப்ரல், புனித தாமஸ் கல்லூரி, திரிச்சூர்
சைலேந்திரா நினைவுத் திரைப்படவிழா : 21-28 ஏப்ரல், சத்யஜித் ரே திரைப்படக்கல்லூரி, கொல்கத்தா
தொழிலாளர் திரைப்படவிழா : 9-11 மே, பல அரங்குகளில், சென்னை
தொழிலாளர் திரைப்படவிழா : 25 மே, மூட்டா அரங்கு, மதுரை
சூழலியல் திரைப்படவிழா : 5-7 ஜூன், பல நகரங்களில், கேரளா
பூமி ஹப்பா திரைப்படவிழா : 7 ஜூன், விஸ்தார், பெங்களூரு
சூழலியல் திரைப்படவிழா : 20-22 ஜுன், பல அரங்குகளில், சென்னை
சூழலியல் திரைப்படவிழா : 29 ஜூன், மூட்டா அரங்கு, மதுரை
மறுபக்கம் திரைப்படவிழா : 12, 13 ஜூலை, சென்னை
மாணவர் திரைப்படவிழா : 26 ஜூலை, லென்ஸ் ஊடக மையம், மதுரை
காவிரிக்கரை திரைப்படவிழா : 29,30 ஜூலை, புனித ஜோசப் கல்லூரி, திருச்சி
விடுதலை திரைப்படவிழா : 16,17 ஆகஸ்ட், சென்னை
நாட்டுப்புறவியல் திரைப்படவிழா : 24 ஆகஸ்ட், லென்ஸ் ஊடக மையம், மதுரை
27வது சமூகநீதித் திரைப்படவிழா : 2 செப்டம்பர், புனித ஜோசப் பல்கலைக்கழகம், பெங்களூரு
28வது சமூகநீதித் திரைப்படவிழா : 17-21 செப்டம்பர், பல அரங்குகளில், சென்னை
அறிவியல் திரைப்படவிழா : 28 செப்டம்பர், லென்ஸ் ஊடக மையம், மதுரை
நாட்டுப்புறவியல் திரைப்படவிழா : 17,18 அக்டோபர், தட்சிணசித்ரா, சென்னை
சூழலியல் திரைப்படவிழா : 2 நவம்பர், கிளஸ்டர் கல்லூரி, கோவை
ரித்திக் கட்டக் திரைப்படவிழா : 15 நவம்பர், பெரியார் திடல், சென்னை
ரித்திக் கட்டக் திரைப்படவிழா : 23 நம்பவர், லென்ஸ் ஊடக மையம், மதுரை
27வது மதுரை பன்னாட்டு ஆவணப்பட & குறும்படவிழா : 6-10 டிசம்பர், பல அரங்குகளில், மதுரை
ரித்திக் கட்டக் திரைப்படவிழா : 21 டிசம்பர், கிளஸ்டர் கல்லூரி, கோவை
ஆண்டு நிறைவுத் திரைப்படவிழா : 28 டிசம்பர், பெரியார் திடல், சென்னை
ஒத்துழைப்புக் கொடுத்த தோழர்கள் அனைவருக்கும் நன்றி.
நிதி உதவி செய்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றி.
அமுதன் ஆர்.பி.
மறுபக்கம் - மாற்றுத்திரைப்படக்களம்
9940642044

No comments:
Post a Comment