Wednesday, May 11, 2016

ஏழைகளுக்கு இலவசங்கள் கொடுக்கலாமா?



ஏழைகளுக்கு இலவசமாக பொருட்கள் கொடுப்பதை ஆட்சேபிக்கும் பணக்காரர்கள், ஏழைகளுக்கு கல்வி கொடுங்கள், வேலை வாய்ப்பு கொடுங்கள், தொழில் தொடங்க வாய்ப்பு கொடுங்கள் என்று சொல்கிறார்கள்.
அதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டால், ஏழைகளுக்கு கல்வி என்றால் என்ன? அரசு நடத்தும் இலவச பள்ளி அல்லது கல்லூரியா? அதை இந்தப் பணக்காரர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
எல்லோருக்கும் இலவசக் கல்வி என்பதை ஏற்றுக்கொள்வீர்களா? அல்லது மானியக் கல்வியையாவது ஏற்றுக்கொள்வீர்களா?
அரசு பள்ளிகளையும் கல்லூரிகளையும் முறையாக நடத்த வேண்டும். அதற்கு நிதி ஒதுக்க வேண்டும்.
ஆசிரியர்கள் வேலைக்கு அமர்த்தப்படவேண்டும். அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் .
அது உங்களுக்கு சம்மதமா?
எல்லோருக்கும் வேலை வாய்ப்பைத் தரவேண்டும் என்றால் அரசாங்கம் தொழில் தொடங்க வேண்டும். அல்லது ஏழைகள் தொழில் தொடங்க நிதி வசதி ஏற்படுத்தித் தரவேண்டும்.
அது உங்களுக்கு சம்மதமா?
படிப்பில் வேலையில் இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.
அது உங்களுக்கு சம்மதமா?
ஏழைகள் சுகாதாரமாக வாழ வேண்டுமென்றால் அரசு குடிநீர் முறையாகக் கொடுக்க வேண்டும். மருத்துவமனைகள் முறையாக நடக்க வேண்டும்.மருத்துவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும்.
சாலை வசதிகள் முறையாக இருக்க வேண்டும்.
பொது போகுவரத்து முறைகளான பேருந்து ரயில் ஆகியன முறையாக நடத்தப்பட வேண்டும்.
அது உங்களுக்கு சம்மதமா?
இதெல்லாம் நடந்தால் ஒரு சோசலிச அரசு தான் இங்கு இருக்கும்.
அது உங்களுக்கு சம்மதமா?
பணக்காரர்களாகிய உங்களுக்கு சாதகமான அரசும் வேண்டும், ஏழைகளுக்கு ஒன்றும் கிடைக்கக் கூடாது என்றால் அவர்களைச் சாகச் சொல்கிறீர்களா?


இலவசம் என்பவை ஏழைகளை சாந்தப்படுத்த கொடுக்கப்படும் கையூட்டு.
அதுவும் இல்லையென்றால் அவர்கள் உன் கழுத்தில் கத்தி வைப்பார்கள் உணவு கேட்டு.
அது உங்களுக்கு சம்மதமா?
நீ தொழில் தொடங்கி கொள்ளை அடிக்க எல்லா சட்டங்களையும் மாற்ற வேண்டும். தொழிலாளர் உரிமைகள் முடக்கப்ப்பட வேண்டும். சுற்றுச்சூழல் விதிகள் தளர்த்தப்படவேண்டும்.
ஆனால் எனக்கு கொடுக்கப்படும் ஒரு ரூபாய் இட்லி வலிக்கிறதா?

No comments:

Post a Comment