இரண்டு விஷயங்கள் புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்க தலைவர் கனையா கைது விவகாரத்தில் எனக்குத் தோன்றுகின்றன.
1) இந்தியாவைப் பிளக்கும் கோஷங்கள் போட்டது தவறு என்று சொல்வதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. இந்தியா எனும் நவீன அரசின், தேசத்தின் உருவாக்கம் இன்னும் முடிந்தபாடில்லை.
அதைப பற்றி நிறைய சர்ச்சைகள் இருக்கின்றன. தமிழர்களாகிய நமக்கு இந்தி எதிர்ப்பு எனும் முழக்கம் இருக்கிறது.
அதற்கும் இந்தியாவிற்கும்இன்னும் ஒத்த கருத்து உருவாகவில்லை. தமிழக மீனவர்கள் கச்சத்தீவை இழந்ததால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
அவர்களின் பாரம்பரிய மீன் பிடிக்கும் உரிமை பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. தமிழருக்கு வேண்டாத வளர்ச்சித் திட்டங்களை இந்தியா நம் மீது திணிக்கிறது. நாம் எதிர்த்தால் நம் மீதும் தேச துரோக வழக்கு போடப்படுகிறது.
இப்படி தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவெங்கும் பல்வேறு மாநிலஙகளில் இந்தியா (மைய அரசு) வுக்கும் இந்தியக் குடிமக்களுக்கும் இடையில் தீர்க்கப்படாதபிரச்சனைகள் பல உள்ளன.
இந்திய அரசு என்பது பார்ப்பனர்களின் ஏற்பாடு. அதற்கும் பிறருக்கும் இன்னும் பல பிரச்சனைகள் உள்ளன. பார்ப்பனர்களுக்கு பிடித்த விஷயங்கள் இந்தியாவின் கருத்தாகவும்அதை ஏற்காதவர்கள்தேச துரோகிகளாகவும்கருதப்படுகின்றனர்.
தனியார்மயமாதல், பன்னாடுக் கம்பெனிகளுக்கு இயற்கை வளங்களை வழங்குதல் போன்ற விஷயத்தில் எது சரி என்கிற ஒத்த கருத்து இல்லை.
துப்பாக்கி, போலீஸ் வைத்து இந்த விவகாரங்களில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
வடகிழக்கு இந்தியா, காஷ்மீர் ஆகிய பகுதி மக்களுக்கு இந்தியாவுடன் இருக்க மனமில்லை.
அவர்களையும் கட்டாயப்படுத்தி, ஆசை காட்டி குடும்பம் நடத்திக்கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒத்த கருத்து உருவாகவில்லை.
இடஒதுக்கீடு பாப்பனர் அல்லாதாரின் உரிமை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய உரிமை. ஆனால் பார்ப்பனர்கள் அதைக் கடுமையாக, வெளிப்படையாக எதிர்க்கின்றனர். அதை உடைக்க பல முயற்சிகள் எடுக்கின்றனர்.
ஒரு புறம் இந்திய அரசு இப்படி பல விவகாரங்களில் பலருடன் ஒத்த கருத்து உருவாக்க முடியாமல் இருக்கும் போது எது தேச துரோகம், எது தேச பாசம்?
இன்னும் நாடு முழுமையாக உருவாகவில்லை.
பிறகு எப்படி எல்லாம் சரி என்று வாயை மூடிக்கொண்டு இருக்க முடியும்?
இந்திய அரசின் (பார்ப்பனர்கள்) விருப்பம் ஒன்றாகவும் பிறரின் விருப்பம் ஒன்றாகவும் உள்ளது.
மாற்றுக்கருத்து நிறைய இருக்கிறது.
மாட்டுக்கறி சாப்பிடாதே என்கிறான் பார்ப்பனன். சாப்பிடுவேன்என்கிறான் மற்றவன்.
கோயிலுக்குள் பெண்களை நுழையாதே என்கிறான் பார்ப்பனன். நுழைவேன் என்கிறாள் பெண்.சாதி மறுப்புத் திருமணம் செய்யாதே என்கிறான் ஒருவன். செய்வேன் என்கிறான் மற்றொருவன்.
மாற்றுக்கருத்து இருக்கிறது.
இருக்கும்.
தேச துரோகம் என்று மிரட்டுவது அபத்தம். அநியாயம். அயோக்கியத்தனம்.
தேசம் என்பது அப்போது அதிகாரத்திற்கு வருகிறவர்களின்கையில் இருக்கும் ஒரு அமைப்பு. இன்னொருவன் வந்தால் இன்னொரு அமைப்பு.
இந்த லட்சணத்தில் என்ன தேச துரோகம்?
இந்திராவை எதிர்த்தால் தேச துரோகம்.
ராஜீவை எதிர்த்தால் தேச துரோகம்.
விபிசிங்கை எதிர்த்தால் இந்து மதப்பற்று,
வாஜ்பாயின் பொக்ரான் வெடிகுண்டு சோதனையை எதிர்த்தால் தேச துரோகம்.
மோடியை எதிர்த்தால் தேச துரோகம்.
ஆளுக்காள் ஒரு தேசம். ஜால்ரா போடுகிறவன் தேசப் பற்றுள்ளவன்.
மாற்றுக்கருத்துள்ளவன் தேச துரோகி.
என்ன நியாயம் இது?
காந்தியை இந்தியர்கள் தேசப் பிதா என்றார்கள். வழிபட்டார்கள். அவரை கோட்சே சுட்டான். கொன்றான்.
உலகமே அதிர்ந்தது. இந்தியாவே வெட்கித் தலை குனிந்தது.
இப்போதும் இந்துத்வ சக்திகள் கோட்சேவை வழிபடுகின்றனர்.
இது என்ன? தேச துரோகமா இல்லையா?
பாபர் மசூதியை இடிப்பேன் என்றார் அத்வானி. அதே இடத்தில் ராமர் கோவிலைக் கட்டுவேன் என்றார் சிங்கல்.
இது தேச துரோகமா இல்லையா?
நாட்டை மதரீதியாக துண்டாடியது தேச துரோகம் இல்லையா? அப்படியென்றால் தேசம் என்றால் என்ன? பார்ப்பன அக்ரஹாரம் தான் தேசமா?
மற்றவர்கள் எப்போதும் அந்நியர்களா?
இருந்தாலும் அத்வானிக்கு பிரச்சாரம் செய்ய உரிமை உண்டு.
மசூதியை இடிக்க உரிமை இல்லை. வன்முறையை உருவாக்க உரிமை இல்லை.
அது குற்றம். அதற்கு அவரையும் அவரது அடியாட்களையும் கைது செய்தார்களா? அதுவும் இல்லை.
காஷ்மீர் தீர்ந்த பிரச்சனையா?
அதைப் பேசக் கூடாதா?
பேசித்தான் ஆகவேண்டும்.
வன்முறை தான் தவறு. விவாதம் தவறு அல்ல.
உனக்குப் பிடிக்காததையும்பேச எனக்கு உரிமை உண்டு.
எனக்குப் பிடிக்காததைப்பேச - எவ்வளவு பொய் ஆனாலும் - சு சாமி, சுயமோகன், சோ, ஜெயா, மோடி கும்பலுக்கு உரிமை உண்டு.
அது தான் ஜனநாயகம்.
இதில் எங்கு வந்தது தேச துரோகம்?
ஆட்சியாளர்கள் அம்பானிக்கு அள்ளிக் கொடுப்பதே தேச துரோகம்.
நாட்டு மக்களின் நலனை அந்நிய முதலீட்டுக்காகஅடகு வைப்பதே துரோகம்.
அப்படிப் பார்த்தால் ஆட்சியாளர்களே - அது யாராக இருந்தாலும் - தேச துரோகிகள்.
எனவே தேச துரோகம் என்கிற வாதம் செல்லாதது. அதை ஏற்க முடியாது.
தேசப் பற்று என்பதே ஒரு ஏமாற்று வேலை.
தேசம் என்பது ஒரு ஏற்பாடு.
குறைந்தபட்ச செயல் திட்டம்.
அவ்வளவு தான். அதற்கு மேல் அதற்கு மதிப்பளிக்க வேண்டியதில்லை.
நல்ல தேசம் உருவாக பேச வேண்டும். பல கருத்துக்களுக்கு இடம் அளிக்க வேண்டும்.
வன்முறை மட்டுமே தவறு.
2) இரண்டாவது அம்சம் என்னவென்றால் இந்தியாவைப் பிளக்கும் கோஷங்களை யார் போட்டார்கள் என்பதே சிக்கலான விஷயமாக இருக்கிறது.
பாஜகவின் மாணவர் அமைப்பினரே, கனையா நடத்திய கூட்டத்தில் இந்தியாவை உடைக்கும் கோஷங்கள் போட்டதாக தகவல்கள் வருகின்றன. காணொளி ஆதாரங்களும் வெளி வந்துள்ளன.
அன்று, காந்தியைச் சுட்ட கோட்சே தம் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தியிருந்தான்.
இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு கலவரத்தை உருவாக்க வேண்டும் என்கிற வெறியில் அதைச் செய்தான்.
ஆனால் காந்தியைக் கொன்றவன் ஒரு இஸ்லாமியர் அல்ல, இந்து என்று அன்றைய உள்துறை அமைச்சர் படேல் அறிவித்து கலவரங்களைத் தடுத்தார்.
அதே செயலைத் தான் இன்றைய பாஜகவும் செய்கிறது.
கூட்டத்தில் போய் கோஷம் போட்டது வேறொருவன். கூட்டத்தை நடத்தியவன் மீது இப்போது தேச துரோக வழக்கு. என்ன அநியாயம்?
இதைத் தான் இவர்கள் கொண்டாடும் பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்கிறார். தீய சக்திகளை அழிக்க எதுவும் செய்யலாம் என்கிறார்.
அவர்களைப் பொறுத்தவரை மாற்றுக் கருத்துள்ள்வன் தீய சக்தி. அவனை அழிக்க என்ன சதியும் செய்யலாம்.
இதை சாணக்கியன் செய்தான். கிருஷ்ணன் செய்தான்.
கோட்சே செய்தான்.
இப்போது பாஜக செய்கிறது.
இவர்கள் மாற மாட்டார்கள் பிறர் தமக்கு சமம் என்று ஏற்க மாட்டார்கள்.
பிறரை தமக்குக் கீழே வைத்து நசுக்கவே பார்ப்பார்கள்.
இவர்கள் தம் நலனுக்காக எதையும் செய்வாரகள்.
நாம் தான் விழிப்பாக இருக்கவேண்டும்.
அம்பேத்கரும் பெரியாரும் நமக்கு வழிகாட்டிச் சென்றிருக்கின்றனர்.
வேறு மார்க்கமில்லை.
சுயமரியாதையே விடுதலை.
No comments:
Post a Comment