Sunday, January 12, 2014

பார்ப்பனர்களா காரணம்?

சாதியக் கொடுமைகளுக்கு இன்னும் பார்ப்பனர்களை குறை கூறலாமா?



வி.பி.சிங் பிரதமராக இருந்த போது இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு (OBC) மத்திய அரசு வேலைகளில் மற்றும் மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் 27% இட ஒதுக்கீடு வழங்கிட வழி வகுக்கும் மண்டல் கமிஷன் அறிக்கையை அமுல்படுத்த முற்பட்டார்அதாவது அது வரை மத்திய அரசு நிறுவனங்களில் ஆதிவாசிகளுக்கும் தலித்துகளுக்கும் தான் இட ஒதுக்கீடு இருந்தது. மீதம் இருக்கும் எல்லா இடங்களும் பார்ப்பனர்களுக்கே சென்றன. அவர்களுடன் போட்டி போட முடியாத இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு 27% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்றது மண்டல் கமிஷன்.   அதைத் தான் அமுல் படுத்த நினைத்தார் வி.பி.சிங்.

ஆனால் பார்ப்பனர்கள் நாடெங்கும் கொதித்து எழுந்தனர். பார்ப்பனர் உள்ளிட்ட பிற உயர் சாதி மாணவர்கள் செருப்புக்கு பாலீஷ் போடும் போராட்டம் நடத்தினர். அதாவது இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு 27% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டால் பார்ப்பனர்களாகிய நாங்கள் செருப்பு பாலீஷ் போடும் வேலைக்குத் தான் போக வேண்டியிருக்கும், என்ன ஒரு அநியாயம் என்று உயர் சாதி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்பட்டமான பார்ப்பன சாதி வெறி தாண்டவம் ஆடியது.



உயர்சாதி குறிப்பாக பார்ப்பனர்களுக்கும் இடைச்சாதியினருக்கும் இடையேயான சாதி ஏற்றத்தாழ்வு மட்டும் ஒடுக்குமுறை பற்றிய விவாதம் நாடெங்கும் உருவானது. பார்ப்பன மாணவர் ஒருவர் தீக்குளித்து இறந்து போனார். (திராவிடக் கட்சியினர் தீக்குளித்து இறப்பதை அதை ஒரு போராட்ட உத்தியாகப் பயன்படுத்துவதைக் கேலி செய்த பார்ப்பன பத்திரிக்கைகள் இப்போது கண்ணீர் வடித்தன) பார்ப்பனர்களுக்கும்   அவர்களின் அடியாள் சாதிகளான இதர பிற்பட்ட சாதியினருக்கும் இடையேயான உறவில்  விரிசல் விழும் நிலை ஏற்பட்டது.


இதைக் கண்டு திகைத்த பார்ப்பனர் கட்சியான பாரதிய ஜனதா தனது தலைவர்களில் ஒருவரான அத்வானி எனும் பார்ப்பனர் தலைமையில் உத்திரபிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதியை இடிப்போம் ராமர் கோவிலைக் கட்டுவோம் எனும் கோஷத்தை எடுத்தது. நம்க்குள் இருக்கும் பிரச்சனையை மறப்போம், அதாவது மண்டல் கமிஷனை மறப்போம்,  நமது மதத்திற்கு ஏற்பட்ட அவமானதைத் துடைப்போம் என்று அறைகூவல் விடுத்தது. கட்டுக்கதைகளையும் பொய்பிரச்சாரத்தையும் புரளி, வெறுப்பு, அச்சம், அவநம்பிக்கை, ஆகியவற்றை மூலதனமாகக் கொண்டு அத்வானி எனும் பார்ப்பனர் ரத யாத்திரை கிளம்பினார். பிற்பட்ட சாதியினர் இந்த “பிரச்சாரத்தில் மயங்கி” தங்களது "சாமி" அழைக்கிறார் என்பதை புல்லரித்துப் போய் தங்களது பார்ப்பன விசுவாசத்தைக் காட்டமுனைந்தனர்.


பஜ்ரங்க் தள் என்று சிறப்பாக  பிற்பட்டசாதிகளைக் கொண்ட ஒரு அடியாள் அமைப்பு உருவாக்கப்பட்டது. அவர்களே அத்வானி எனும் பார்ப்பனர் வளர்த்த மதவெறி எனும் போர்வையில் நடத்திய சாதிவெறி வேள்வியில் கட்டையாகவும், நெய்யாகவும், இதர பிற தியாகக் கொழுந்தாகவும் எரிந்தனர். முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்களில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான முஸ்லீம்களும் பிற்பட்ட சாதியைச் சேர்ந்த அப்பாவி/முட்டாள் இந்துக்களும் கொல்லப்பட்டனர்.


 வி.பி.சிங்கிற்கு கொடுத்த ஆதரவை பா.. வாபஸ் வாங்கியதும் அவர் ஆட்சி கவிழ்ந்ததும் பின்னாட்களில் நரசிம்மராவ் எனும் பார்ப்பனர் காங்கிரஸ் பிரதமராக இருந்த போது கல்யாண் சிங்க் எனும் பிற்பட்டசாதி அடியாள் பாஜக முதல்வராக உத்திரப்பிரதேசத்தில் இருந்த பொது அத்வானி மற்றும் பிற பார்ப்பனர்களின் ஆசைப்படி மறுபடியும் அப்பாவி/முட்டாள் பிற்படுத்தப்பட்ட சாதிக்காரர்களைக் கொண்ட பஜ்ரங்க் தள் அமைப்பினரும் விஷ்வ ஹிந்து பரிசத்தில் இருந்த பிற அடிமைகளும் இணைந்து பாபர் மசூதியை வெற்றிகரமாக இடித்தத் தள்ளினர். தமிழ்நாட்டு பார்ப்பன சாதி வெறியர்களில் ஒருவரான சோ ராமசாமிக்குப் பிடிக்காத ஒரு தலைவர் வி.பி.சிங் என்பது கூடுதல் தகவல்.

இட ஒதுக்கீடு மற்றும் பிற சலுகைகளுக்கு எதிரான பொய்ப் பிரச்சாரத்தை பார்ப்பனர்களே தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பதற்க் இது ஒரு உதாரணம். ஏனெனில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தின் மீது செலுத்தப்பட்ட சட்டரீதியான தாக்குதல் இடஒதுக்கீடு. அதனால் பார்ப்பனர்கள் பெருவாரியாக இட ஒதுக்கிட்டு முறைக்கு எதிரான மனநிலை கொண்டிருக்கின்றனர். அவர்களின் அடியாள் சாதிகளான பிற்பட்ட சாதியினருக்கு தங்களது நன்மைக்குத் தான் இட ஒதுக்கீடு வந்திருக்கிறது என்பது கூட அறியாத வண்ணம் அவர்களுடைய பார்ப்பன விசுவாசம் கண்களை மறைக்கிறது.



அதைத் தான் பெரியார் சுயமரியாதை எனும் ஆயுதத்தைக் கொண்டு முறியடிக்க முற்பட்டார். உன்னை சூத்திரன் (தேவிடியா மகன்) என்று பார்ப்ப்னர் அழைக்கிறான், அவன் பின்னால் போகாதே என்றார். சுயமரியாதை இயக்கம் வளர்ந்தது. திராவிடக் கட்சிகள் தோன்றின. பிற்படுத்தப்பட்ட சாதியினர் அரசியல் அதிகாரம் பெற்றனர். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் பார்ப்பன விசுவாசம் அவர்களை மறுபடியும் வீழ்த்தி விட்டது. அதனால் தான் ஜெயலலிதா எனும் பார்ப்பனர் பின்னால் போனார்கள். அவர்களுக்கு திராவிட அரசியல் வேண்டும். அரசியல் அதிகாரம் வேண்டும். ஆனால் சுயமரியாதை வேண்டாம். தாங்கள் சிறந்த அடிமை என்பதை நிரூபித்துவிட்டனர். அதனால் தான் வசதி வந்த பிற்படுத்தப்பட்ட சாதியினர் வீடுகளில் தங்கள் வழக்கத்தை மறந்து பார்ப்பனர்களை வைத்து சமஸ்கிருத மொழியில் ஓதி திருமணம் மற்றும் பிற சடங்குகள் நடக்கத்தொடங்கியுள்ளன.

பிற்படுத்தப்பட்ட சாதியினரின் தலித் விரோத நிலைக்கு பார்ப்பன விசுவாசமே காரணம். ஏனெனில் பார்ப்பனர் உருவாக்கிய சாதிய படிநிலையே அவர்களுக்கு போலி அடியாள் அதிகாரத்தை உருவாக்கிக்கொடுத்திருக்கிறது. தாங்கள் தலித்துகளை விட உயர்ந்தவர்கள் என்கிற மயக்க நிலையைக் கொடுத்திருக்கிறது. கீழ்வெண்மணி படுகொலை பற்றிய வரலாற்றில் பிற்படுத்தப்பட்ட சாதியைச்சேர்ந்தவர்கள் பார்ப்பன பண்ணையார்களுக்கு அடியாட்களாக இருந்திருக்கின்றனர் என்பதையும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்களை அடிப்பதற்கும், உதைப்பதற்கும், சித்ரவதை செய்வதற்கும், சாணிப்பால் குடிக்க வைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டனர் என்பதையும் பார்க்கிறோம்.


இந்திய வரலாற்றை பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாதவர் ஆகிய இரு பிரிவினருக்கு இடையே நிகழும் போராட்டம் என்று ஒற்றை வரியில் கூறமுடியும். அவ்வப்போது பார்ப்பனர் அல்லாதவர் வெற்றி பெறுவது போலத் தோன்றினாலும் பார்ப்பனர்கள் தொடர்ந்து தங்களது அதிகாரத்தைத் தக்க வைக்க சித்து வேலைகள் செய்தபடியே இருப்பர். சாதி எனும் விஷம் தலைக்கேறி யாரும் யாரையும் கொலை செய்யலாம். அடித்துக் கொள்ளலாம்.. ஆனால் அதன் பிடிமானம் (தியரி) அவாள் கையில் தான் இருக்கிறது. அவாள் இஷ்டபடியே தான் நடக்கிறது.

அதற்காக பிற்படுத்தப்பட்ட சாதியினரை நான் அப்பாவிகள் என்று சொல்லமாட்டேன். அவர்களுக்கு பொறுப்பு இல்லை என்று சொல்ல மாட்டென். அவர்களும் இந்த சாதியக் கட்டமைப்பில் முக்கிய அங்கம் வகிக்கின்றனர். சாதி கொடுக்கும் அத்தனை அதிகாரங்களையும் ரசிக்கின்றனர். ருசிக்கின்றனர். பருகிக் குடிக்கின்றனர். குடிபோதையில் கொலை செய்தாலும் குற்றவாளி குற்றவாளி தான். ஆனால் போதையூட்டியவனை விடமுடியுமா? அவனை மறக்கலாமா? அவனது வியாக்கியானங்களை மன்னிக்க முடியுமா?